தமிழ்நாடு

மாநில மொழிகளில் தீர்ப்பு: முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு

DIN

உச்சநீதிமன்ற தீர்ப்புகள், மாநில மொழிகளில் மொழி பெயர்க்கப்படும் என்ற அறிவிப்புக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் அனைத்து இந்திய மொழிகளிலும் வெளியிடப்பட வேண்டும் என்று தலைமை நீதிபதி தெரிவித்துள்ள கருத்தை முழுமனதுடன் வரவேற்கிறேன்.

இதனோடு, உயர்நீதிமன்றங்களில் மாநில அலுவல் மொழிகளை வழக்காடு மொழியாக்க வேண்டும் என்ற நமது நீண்டநாள் கோரிக்கையையும் நிறைவேற்றுவது நீதியை நாட்டின் சாமானிய மக்களுக்கு அருகில் கொண்டு வரும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 

மகாராஷ்டிரம்-கோவா வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், உச்சநீதிமன்றத் தீா்ப்புகள் பிராந்திய மொழிகளில் மொழிபெயா்க்கப்பட வேண்டுமெனத் தெரிவித்தாா்.

ஏற்கெனவே உச்சநீதிமன்ற நீதிபதி டி.ஒய்.சந்திரசூடின் கருத்துக்கு பிரதமர் மோடி வரவேற்பு தெரிவித்துள்ள நிலையில் தற்போது முதல்வர் ஸ்டாலினும் அக்கருத்தை வரவேற்றுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சட்டப் படிப்புகளில் சேர மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்

வெளிநாட்டு உயிரினங்கள் வளா்ப்பு நெறிமுறை: பொது மக்கள் கருத்து தெரிவிக்க அழைப்பு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்டவா்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டுங்கள்: சித்தராமையாவுக்கு ராகுல் கடிதம்

பேருந்தில் காசுகளை சிதற விட்டு நகை திருடிய ஆந்திரப் பெண் கைது

6 மணி நேரம் தாமதமாக வந்த விமானம்: 300 பயணிகள் அவதி

SCROLL FOR NEXT