தமிழ்நாடு

ராமேஸ்வரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை

ராமேஸ்வரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. மேலும், பாம்பன், தனுஷ்கோடி, தங்கச்சிமடம் உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

DIN

ராமேஸ்வரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. மேலும், பாம்பன், தனுஷ்கோடி, தங்கச்சிமடம் உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று அதிகாலை முதலே ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பல்வேறு பகுதிகளில் அவ்வப்போது சாரல் மழையும் பெய்தது.

ஒரு மாத காலமாக இரவில் பனிப்பொழிவு, பகலில் வெயில் வாட்டி வந்த நிலையில், தற்போது ராமேஸ்வரத்தின் தங்கச்சிமடம், மண்டபம், தனுஷ்கோடி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், குளிர்ச்சியான சூழ்நிலை நிலவுகிறது.

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழக கடலோர மாவட்டங்களில் திங்கள் கிழமை (ஜன.23) மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இது குறித்து வானிலை மையம் ஞாயிற்றுக்கிழமை கூறியிருந்ததாவது, கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழக கடலோர மாவட்டங்கள், அதை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலையில் லேசான பனிமூட்டத்துக்கு வாய்ப்புள்ளது.

நீலகிரி மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் இரவு நேரங்களில் ஓரிரு இடங்களில் உறை பனிக்கு வாய்ப்புள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வட வானிலை நிலவுகிறது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேஷ ராசிக்கு லாபம்: தினப்பலன்கள்!

இறுதிச் சடங்கு ஊா்வலம் நடத்துவோா் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்: நகராட்சி

பைக் மீது காா் மோதல்: முதியவா் உயிரிழப்பு

அரசு மாதிரிப் பள்ளியில் பசுமை விழா

மரம் முறிந்து விழுந்து அரசு அலுவலக சுற்றுச்சுவா் சேதம்

SCROLL FOR NEXT