கோப்புப்படம் 
தமிழ்நாடு

ஜன.25-ல் பா.ம.க மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!

ஜன.25-ல் பா.ம.க மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறவுள்ளதாக கட்சித் தலைமை அறிவித்துள்ளது. 

DIN

ஜன.25-ல் பா.ம.க மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறவுள்ளதாக கட்சித் தலைமை அறிவித்துள்ளது. 

பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்ட தலைவர்கள் கூட்டம் நாளை மறுநாள் (25.01.2023) புதன்கிழமை காலை 10.00 மணிக்கு விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தையடுத்த  தைலாபுரத்தில் உள்ள  பாட்டாளி மக்கள் கட்சியின் அரசியல் பயிலரங்கத்தில் நடைபெறவிருக்கிறது.

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் முன்னிலையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், கெளவுரவத் தலைவர் ஜி.கே.மணி, பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன், பொருளாளர் திலகபாமா ஆகியோரும் கலந்து கொள்வார்கள்.

பாட்டாளி மக்கள் கட்சியின் வளர்ச்சிப் பணிகள் குறித்து விவாதிப்பதற்காக நடைபெறவுள்ள இந்த கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் அனைத்து மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்ட தலைவர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முத்துக்கள் மலரும்... நிகிதா தத்தா!

பருவம்... மாளவிகா மேனன்!

கோல்டன்... திவ்ய பாரதி!

பஞ்சாப் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு அழுத சிறுவன்.. ராகுல் காந்தி அளித்த பரிசு!

விஜய்க்கு கொள்கை, கோட்பாடு இல்லை; எனக்கும்தான் கூட்டம் வந்தது! - சரத்குமார்

SCROLL FOR NEXT