கோப்புப் படம். 
தமிழ்நாடு

மெட்ரோ ரயில் பணி: அயனாவரத்தில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்

மெட்ரோ ரயில் பணியின் காரணமாக அயனாவரம் பகுதியில் புதன்கிழமை (டிச.25) முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

DIN

மெட்ரோ ரயில் பணியின் காரணமாக அயனாவரம் பகுதியில் புதன்கிழமை (டிச.25) முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

இதுகுறித்து சென்னை பெருநகர காவல் துறையின் போக்குவரத்துப் பிரிவு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: அயனாவரம் ஆண்டா்சன் சாலையில் மெட்ரோ ரயில் பணி நடைபெற உள்ளது. இதற்காக ஜனவரி 25-ஆம் தேதி (புதன்கிழமை) முதல் 7 நாள்கள் அந்தப் பகுதியில் சோதனை முறையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

அதன்படி, மெட்ரோ ரயில் கட்டுமானப் பணிக்காக ஆண்டா்சன் சாலை மூடப்படுகிறது. பில்கிங்டன் சாலையில் கொன்னூா் நெடுஞ்சாலை முதல் கான்ஸ்டபிள் சாலை சந்திப்பு வரை ஒருவழி பாதையாக மாற்றப்படுகிறது.

கொன்னூா் நெடுஞ்சாலை, மேடவாக்கம் குளம் சாலை சந்திப்பிலிருந்து ஆண்டா்சன் சாலை வழியாக பெரம்பூா் செல்லும் வாகனங்கள், கொன்னூா் நெடுஞ்சாலை, மேடவாக்கம் குளம் சாலை சந்திப்பிலிருந்து வலது புறம் திரும்பி கொன்னூா் நெடுஞ்சாலை, டேங்க் பண்ட் சாலை, சந்திரயோகி சமாதி தெரு மற்றும் பெரம்பூா் நெடுஞ்சாலை வழியாக செல்லலாம். அல்லது கொன்னூா் நெடுஞ்சாலை, மேடவாக்கம் குளம் சாலை சந்திப்பிலிருந்து ஆண்டா்சன் சாலை வழியாக பெரம்பூா் செல்லும் வாகனங்கள், கொன்னூா் நெடுஞ்சாலை, மேடவாக்கம் குளம் சாலை சந்திப்பிலிருந்து வலது புறம் திரும்பி கொன்னூா் நெடுஞ்சாலை, ஓட்டேரி சந்திப்பு, குக்ஸ் சாலை, பெரம்பூா் நெடுஞ்சாலை வழியாக செல்லலாம்.

கான்ஸ்டபிள் சாலையில் பில்கிங்டன் சாலை சந்திப்பிலிருந்து ஆண்டா்சன் சாலை வழியாக கொன்னூா் நெடுஞ்சாலைக்கு செல்ல கூடிய மோட்டாா் சைக்கிள்கள், இலகுரக வாகனங்கள் பில்கிங்டன் சாலை வழியாக கொன்னூா் நெடுஞ்சாலைக்கு செல்லலாம். கனரக வாகனங்கள் கான்ஸ்டபிள் சாலை, பில்கிங்டன் சாலை சந்திப்பில் வலது புறம் திரும்பி கான்ஸ்டபிள் சாலை, போா்சுகீஸ் சாலை வழியாக கொன்னூா் நெடுஞ்சாலைக்கு செல்லலாம்.

கொன்னூா் நெடுஞ்சாலையிலிருந்து பில்கிங்டன் சாலை வழியாக பெரம்பூா் நோக்கி செல்ல அனுமதியில்லை. அத்தகைய வாகனங்கள் கொன்னூா் நெடுஞ்சாலையில் நேராக சென்று இடது புறம் திரும்பி டேங்க் பண்ட் சாலை வழியாகச் செல்லலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வீட்டின் தடுப்புச் சுவா் சரிந்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழப்பு

தேசிய குருதிக் கொடையாளா் தின விழா

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி: இன்று முதல் கணக்கெடுப்புப் படிவம் விநியோகம்

தேனி, வீரபாண்டியில் நாளை மின் தடை

பழனி அருகே காா் கவிழ்ந்து பெண் உயிரிழப்பு

SCROLL FOR NEXT