புகையிலை பொருள்களுக்கான தடை ரத்து: சென்னை உயர் நீதிமன்றம்
உணவு பாதுகாப்பு சட்டத்தில் புகையிலை பொருள்களுக்கு தடை விதித்த பாதுகாப்பு ஆணையரின் உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
உணவு பாதுகாப்பு சட்டத்தில் புகையிலை பொருள்களுக்கு தடை விதித்த பாதுகாப்பு ஆணையரின் உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
குட்கா, பான் மசாலா, புகையிலை உள்ளிட்ட போதைப் பொருள்களுக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. உணவு பாதுகாப்பு ஆணையரின் உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது, இவ்வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், உணவு பாதுகாப்பு சட்டத்தில் புகையிலை பொருள்களுக்கு விதித்த தடையை ரத்து செய்துள்ளது.
மேலும், உணவு பாதுகாப்பு மற்றும் தர சட்டத்தில் புகையிலை பொருள்களுக்கு முழு தடை விதிக்கவில்லை. உணவு பாதுகாப்பு சட்டத்தில் அவசர நிலை கருதி தற்காலிக தடை விதிக்க மட்டுமே அதிகாரம் உள்ளது. அதிகாரத்தை மீறி உணவு பாதுகாப்பு ஆணையர் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது என நீதிபதிகள் தெரிவித்தனர்.
Advertisement
Advertisement
இதையும் படிக்க: ஈரோடு இடைத்தேர்தலில் காங்கிரஸுக்கு கமல் ஆதரவு!
மேலும், தடை உத்தரவை மீறியதாக எடுக்கப்பட்ட குற்ற நடவடிக்கைகளும் ரத்து செய்யப்படுள்ளதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.