கோப்புப்படம் 
தமிழ்நாடு

குடியரசு நாள்: பாதுகாப்பு வளையத்தில் சென்னை!

குடியரசு தினத்தை முன்னிட்டு, சென்னை முழுவதும் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

DIN

குடியரசு தினத்தை முன்னிட்டு, சென்னை முழுவதும் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

நாடு முழுவதும் நாளை குடியரசு தினவிழா கொண்டாடப்படவுள்ள நிலையில், எவ்வித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் இருக்க காவல்துறையினர் தீவிர எச்சரிக்கையுடன் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள முக்கிய வழிபாட்டுத் தலங்கள், சுற்றுலாத் தலங்கள், விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் என பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் காவல்துறையினர் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

அதேபோல், தமிழக அரசு சார்பில் காமராஜா் சாலையில் (கடற்கரைச் சாலை) உழைப்பாளா் சிலை அருகே இந்தாண்டு குடியரசு தினம் கொண்டாடப்படவுள்ளதால், நேற்றுமுதல் அந்த சாலைகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை விமான நிலையம், காமராஜர் சாலைகளில் 5 அடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டு சோதனை நடைபெறும் நிலையில், சென்ட்ரல் ரயில் நிலையம், எழும்பூர் ரயில் நிலையம், கோயம்பேடு பேருந்து நிலையம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளும் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

மேலும், சென்னை மாநகர எல்லைப் பகுதிகளான திருவொற்றியூா், மதுரவாயல், மீனம்பாக்கம், துரைப்பாக்கம், நீலாங்கரை உள்ளிட்ட பகுதிகளில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு வாகனத் தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பவானியில் 300 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

மானாமதுரை நகா் காங்கிரஸ் தலைவா் நியமனம்

பண்ணாரி அம்மன் கோயிலில் குவிந்த பக்தா்கள்

அறச்சலூா் ஓடாநிலையில் தீரன் சின்னமலை ஆடிப்பெருக்கு விழா

ஆடிப்பெருக்கு: பவானிசாகா் அணைப் பூங்காவில் குழந்தைகள், பெண்கள் கொண்டாட்டம்

SCROLL FOR NEXT