தமிழ்நாடு

தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

தமிழகத்தில் முக்கியத் துறைகளின் செயலாளர்கள் உள்பட ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து, தமிழக தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

DIN

சென்னை: தமிழகத்தில் முக்கியத் துறைகளின் செயலாளர்கள் உள்பட ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து, தமிழக புதிய தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா பிறப்பித்திருக்கும் உத்தரவில், உயர்கல்வித் துறை செயலாளராக கார்த்திக் நியமிக்கப்பட்டுள்ளார்.

மகளிர் உரிமைத் தொகை திட்ட சிறப்பு அதிகாரியாக இளம் பகவத் (கூடுதல் பொறுப்பு)நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

உயர்கல்வித் துறை செயலாளராக இருந்த கார்த்திகேயன் நகராட்சி நிர்வாகத் துறை மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை செயலாளராக ரீத்தா ஹரீஷ் தக்கர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

நுகர்பொருள் வாணிபக் கழக இயக்குநராக அண்ணாதுரை நியமிக்கப்பட்டுள்ளார்.

நுகர்பொருள் வாணிபக் கழக மேலாண் இயக்குநராக இருந்த பிரபாகர் தாஸ்,  சாலை மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கால்நடை பராமரிப்பு, மீன்வளம் மற்றும் பால்வளம் துறை கூடுதல் செயலாளராக மங்கத் ராம் ஷர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.

மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் இணை மேலாண் இயக்குநராக (நிதி) விஷு மகாஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.

கலைஞர் நூற்றாண்டு விழா தொடர்பான நிகழ்ச்சிகளை மேற்பார்வை செய்ய தனி அதிகாரியாக சுப்பையா நியமிக்கப்பட்டுள்ளார்.

வருவாய் மற்றும் நிதித்துறை துணை ஆணையராக ஆனந்த் மோகன் நியமிக்கப்பட்டுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: வாக்களிக்காத 13 பேர் யார்?

2025-க்கான இபி-1 க்ரீன் கார்டு விசா நிறைவு: அமெரிக்கா

நம்பி ஏமாறுபவர்கள் இந்த ராசிக்காரர்கள்!

நேபாள அதிபர் ராம் சந்திர பௌடேல் ராஜிநாமா!

பூங்காற்று... கீர்த்தி சுரேஷ்!

SCROLL FOR NEXT