தமிழ்நாடு

கிருஷ்ணகிரி அணை, பாரூர் ஏரியிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

கிருஷ்ணகிரி அணை, பாரூர் ஏரியிலிருந்து முதல் போக பாசனத்திற்கு தண்ணீரை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் கே.எம் சரயு திங்கள்கிழமை திறந்து வைத்தார்.

DIN


கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அணை, பாரூர் ஏரியிலிருந்து முதல் போக பாசனத்திற்கு தண்ணீரை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் கே.எம் சரயு திங்கள்கிழமை திறந்து வைத்தார்.

கிருஷ்ணகிரி அணையில் இருந்து திறக்கப்பட்ட பாசன நீர் மூலம் பெரிய முத்தூர்,  தளியள்ளி , மாரி செட்டிய அள்ளி,  திம்மாபுரம்,  குண்டல பட்டி, பையூர் பதினாறு ஊராட்சிகளை சேர்ந்த 9012 ஏக்கர் பரப்பளவு விவசாய நிலங்கள் பயன்பெறும்.

பாரூர் ஏரியிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீர் மூலம் பாரூர்,  கோட்டப்பட்டி, அரசம்பட்டி உள்ளிட்ட 7 ஊராட்சிகளை சேர்ந்த பத்தாயிரம் ஏக்கர் பரப்பளவு விவசாய நிலங்கள் பயன்பெறும்.

இந்த நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி மக்களவை உறுப்பினர் அ. செல்லகுமார், பர்கூர் சட்டப்பேரவை உறுப்பினர் தே. மதியழகன் ஆகியோர் கலந்துகொண்டனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எல்லையில் பதற்றம்! பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு - சண்டை நிறுத்தம் மீறல்!

உயிர்த்தெழும் ஓவியமே... ப்ரீத்தி சர்மா!

வங்கதேசத்தில் 2026 பிப்ரவரியில் பொது தேர்தல்! இடைக்கால அரசு அறிவிப்பு!

அனில் அம்பானியிடம் 9 மணி நேரம் விசாரணை: பிடியை இறுக்கும் அமலாக்கத் துறை!

கோபி, சுதாகரின் ஓ காட் பியூட்டிஃபுல் புரோமோ விடியோ!

SCROLL FOR NEXT