செந்தில் பாலாஜி சகோதரர் தரப்பில் வருமானவரித் துறையில் விளக்கம்!
செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் தரப்பில் வருமானவரித் துறையில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் தரப்பில் வருமானவரித் துறையில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. சோதனையின்போது அசோக் குமார் வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் தொடர்பாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
வருமானவரித் துறை அதிகாரிகள் முன்பு செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் விரைவில் ஆஜராகவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருமானவரித் துறையிலிருந்து இரு முறை சம்மன் அனுப்பியும், அசோக் குமார் நேரில் ஆஜராகவில்லை.
இந்நிலையில், அசோக் குமார் வழக்குரைஞர் வருமானவரித் துறை அதிகாரிகள் முன்பு இன்று ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார். வருமானவரித் துறை அதிகாரிகள் கேட்ட ஆவணங்களை திரட்டி வருவதாக வழக்குரைஞர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆவணங்கள் திரட்டுவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் அசோக் குமார் ஆஜராவதில் தாமதம் ஏற்படுவதாகவும் வழக்குரைஞர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.