முகப்பு
தமிழ்நாடு

நில அபகரிப்பு வழக்கு: அமைச்சர் பொன்முடி விடுவிப்பு

நில அபகரிப்பு தொடர்பான வழக்கில் இருந்து தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடியை விடுவித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

Updated On : 6 ஜூலை, 2023 at 11:01 AM
அமைச்சர் பொன்முடி
பகிர்:

சென்னை: நில அபகரிப்பு தொடர்பான வழக்கில் இருந்து தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடியை விடுவித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

கடந்த 1996-ஆம் ஆண்டு போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த பொன்முடி, 3,630 சதுர அடி அரசு நிலத்தை போலி ஆவணம் தயாரித்து பதிவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த குற்றச்சாட்டை தொடர்ந்து, பொன்முடி உள்பட 10 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை 2003-ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது.

Advertisement

இந்த வழக்கை எம்.பி., எம்.எல்.ஏ., வழக்குகளை விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்றம் விசாரித்த நிலையில், குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை எனக் கூறி அமைச்சர் பொன்முடி உள்ளிட்ட அனைவரையும் விடுவித்து உத்தரவிட்டது.

ஏற்கெனவே சொத்து குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவியை நீதிமன்றம் விடுவித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.