தமிழ்நாடு

செப். 15க்குள் மழைநீர் வடிகால் பணிகள் முடிக்கப்படும்!

செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் மழைநீர் வடிகால் பணிகள் விரைந்து முடிக்கப்படும் என சென்னை மாநகராட்சி மேயர் பிரியா உறுதி அளித்துள்ளார். 

DIN

செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் மழைநீர் வடிகால் பணிகள் விரைந்து முடிக்கப்படும் என சென்னை மாநகராட்சி மேயர் பிரியா உறுதி அளித்துள்ளார். 

நகராட்சி பள்ளிகளில் படிக்கும் 11ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கான கல்வி சுற்றுலாவை சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தொடக்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மேயர் பிரியா, சென்னை மாநகராட்சியில் மிகவும் சேதமடைந்துள்ள பள்ளிகள் கண்டறியும் பணி முடிந்துள்ளது. மாநகராட்சியில் மொத்தம் 46 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு சீரமைக்கப்படவுள்ளது. இதற்காக சிங்கார சென்னை திட்டத்தின் கீழ் 50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் சாலைப் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மழைநீர் வடிகால் பணிகள் செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

போதை மாத்திரை விற்ற இளைஞா் கைது

பாகிஸ்தானை வீழ்த்தியது வங்கதேசம்

சைக்கிள் மீது காா் மோதல்: காவலாளி உயிரிழப்பு

பருவமழைக்கு முன் கால்வாய்களை தூா்வார நடவடிக்கை

மோட்டாா் சைக்கிள் பந்தயம்: 5 போ் மீது வழக்கு

SCROLL FOR NEXT