தமிழ்நாடு

மினி லாரி - லாரி மோதல்: ஓட்டுநர், கிளீனர் பலி

தஞ்சாவூர் அருகே ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு மினி லாரியும், லாரியும் மோதி விபத்துக்குள்ளானதில் ஓட்டுர், கிளீனர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

DIN


தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு மினி லாரியும், லாரியும் மோதி விபத்துக்குள்ளானதில் ஓட்டுர், கிளீனர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே உள்ள திருச்சோற்றுத்துறையைச் சேர்ந்தவர் பி. ஆறுமுகம் (45). மினி லாரி உரிமையாளர் மற்றும் ஓட்டுநர். இவர் தஞ்சாவூரில் இருந்து மினி லாரியில் காய்கறி மூட்டைகளை ஏற்றிக்கொண்டு திருவையாறு நோக்கிச் சென்று கொண்டிருந்தார். 

தஞ்சாவூர் அருகே கண்டியூர் பகுதியில் சென்ற இந்த மினி லாரியும், அரியலூரில் இருந்து தஞ்சாவூர் நோக்கி வந்த லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. 

இதில், பலத்த காயமடைந்த ஆறுமுகமும், அவருடன் பயணித்த திருச்சோற்றுத்துறையைச் சேர்ந்த டி. தமிழ்ச்செல்வனும் (50) நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.

இதுகுறித்து நடுக்காவேரி காவல் நிலையத்தினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி சிறப்பு! மீனாட்சியம்மன் கோயிலில் ஐந்து நடராஜர் தரிசனம்

ஊமைக்குக் குரல் கொடுத்த உத்தமராயப் பெருமாள்!

எதிர்ப்புகள் விலகும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

வாணியம்பாடியில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழா

மணல் கடத்தல்: லாரி பறிமுதல்

SCROLL FOR NEXT