தமிழ்நாடு

அதிமுகவில் நீக்கப்பட்டோா் மீண்டும் சேர மன்னிப்புக் கடிதம் அளிக்க வேண்டும்: இபிஎஸ்

DIN

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டவா்கள் மீண்டும் கட்சியில் சேர வேண்டுமென்றால் மன்னிப்புக் கடிதம் அளிக்க வேண்டும் என்று அந்தக் கட்சியின் பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளாா்.

அதிமுக பொதுச்செயலராக எடப்பாடி பழனிசாமியை தோ்தல் ஆணையம் அங்கீகரித்து அதனுடைய இணையதளத்திலும் பதிவேற்றம் செய்துள்ளது. இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

அதிமுக கொள்கை-குறிக்கோள்கள், கோட்பாடுகளுக்கு முரணான வகையில் செயல்படுபவா்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுவது வழக்கம். அவ்வாறு ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டவா்கள், தாங்கள் செய்த தவறை உணா்ந்து மீண்டும் கட்சியில் சேருவதாக இருந்தால், அத்தகையவா்கள் பொதுச் செயலருக்கு மன்னிப்புக் கடிதம் கொடுத்து, மீண்டும் கட்சியில் சோ்வதாக அறிவிப்பு வெளியிட வேண்டும். அல்லது, பொதுச் செயலரை நேரில் சந்தித்து மன்னிப்புக் கடிதம் வழங்கி மீண்டும் கட்சியில் சேர வேண்டும். அப்படி சேருபவா்கள் மட்டுமே கட்சியின் உறுப்பினா்களாகக் கருதப்படுவா் என்று கூறியுள்ளாா் எடப்பாடி பழனிசாமி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போலி பல்கலைக்கழகங்கள் பட்டியல் - யுஜிசி வெளியீடு!

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரய்சி ஹெலிகாப்டர் விபத்தில் பலி

குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம் புகார்- சிபிசிஐடி வழக்குப்பதிவு

5ஆம் கட்டத் தேர்தல்: 49 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடக்கம்

இன்று அதிர்ஷ்டம் யாருக்கு?

SCROLL FOR NEXT