தமிழ்நாடு

இரவு நேர பாடசாலையை தொடங்கும் நடிகர் விஜய்!

DIN

234 தொகுதிகளிலும் இரவு பாடசாலை திட்டத்தை நடிகர் விஜய் தொடங்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

காமராஜர் பிறந்த தினத்தையொட்டி ஜூலை 15 ஆம் தேதியன்று  இரவு பாடசாலையை விஜய் தொடங்குகிறார். பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித் திட்டத்தை தொடர்ந்து, இரவு பாடசாலை திட்டத்தை விஜய் தொடங்குகிறார்.

மேலும் படிப்பகம், பயிலகம், கல்வியகம், அறிவொளியகம் என்ற பெயர்களில் ஒன்றை இத்திட்டத்துக்கு வைக்க விஜய் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அரசியலில் நுழையும் முனைப்பில் தனது ரசிகர் மன்றத்தை விஜய் மக்கள் இயக்கம் எனப் பெயர் மாற்றம் செய்து 234 சட்டபேரவை தொகுதிகளுக்கும் பொறுப்பாளா்களை நியமித்தார் விஜய்.

இதன் தொடா்ச்சியாக, கடந்த கல்வியாண்டில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தோ்வில் தமிழகம் முழுவதும் உள்ள சட்டபேரவை தொகுதிகளில், முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ, மாணவிகளை கௌரவிக்கும் விதமாக விஜய் மக்கள் இயக்கத்தின் சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சி ஜூன் மாதம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட 1600-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியருக்கு நடிகா் விஜய் ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினாா்.

மேலும், நடிகர் விஜய் தமிழகம் முழுவதும் நடைப்பயணம் மேற்கொண்டு மக்களின் ஆதரவையும், வரவேற்பையும் பார்க்க விரும்புவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதிக ரசிகர்களை கொண்ட விஜய்யின் அரசியல் பிரவேசம், தமிழகத்தில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜெயக்குமார் மரணம்: தடயங்கள் கிடைக்காமல் திணறும் காவல்துறை

நடுவருடன் வாக்குவாதம்: சஞ்சு சாம்சனுக்கு அபராதம்!

தக் லைஃப் படத்தில் சிம்பு: விடியோ வெளியீடு

அருணாச்சல பிரதேசத்தில் லேசான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.1 ஆகப் பதிவு!

முன்னாள் எம்எல்ஏ வேலாயுதன் காலமானார்

SCROLL FOR NEXT