தமிழ்நாடு

திருக்கடையூர் ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் கோயிலில் ஆடிப்பூர விழா கொடியேற்றம்!

திருக்கடையூர் ஸ்ரீ  அபிராமி உடனாகிய அமிர்தகடேஸ்வரர் கோயிலில் ஆடிப்பூரம் விழாவை முன்னிட்டு கொடியேற்றம் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

DIN

திருக்கடையூர் ஸ்ரீ  அபிராமி உடனாகிய அமிர்தகடேஸ்வரர் கோயிலில் ஆடிப்பூரம் விழாவை முன்னிட்டு கொடியேற்றம் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான ஸ்ரீ அபிராமி உடனாகிய அமிர்தகடேஸ்வரர் கோவிலில்  ஆயுள் விருத்திக்காக திருமணங்கள் மற்றும்  பூஜைகள் நடைபெறுகிறது.

இக்கோயிலில்  ஆண்டுதோறும்  ஆடிப்பூர திருவிழா நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு ஆடிப்பூர திருவிழாவையொட்டி கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. விநாயகர், அபிராமி அம்மன், சண்டிகேஸ்வரர் சாமிக்கு சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் அருகில் எழுந்தருளினார். பின்னர் சிறப்பு பூஜைகள் செய்து கொடியேற்றம் நடைபெற்றது. விழாவில் கட்டளை தம்பிரான் சுவாமிகள், கோவில் கண்காணிப்பாளர் மணி, உள்துறை கண்காணிப்பாளர் விருத்தகிரி, கணேச குருக்கள் மற்றும் திரளான பக்தர்கள்  கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் தொடர்ந்து விழா நாள்களில் பல்வேறு வாகனங்களில் சாமி வீதி உலா நிகழ்ச்சி நடைபெற உள்ளது. 

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகின்ற 21-ம் தேதி தேரோட்டம் திருவிழாவும், 22-ம் தேதி அபிராமி அம்மன் ஆடிப்பூர தீர்த்த வரி நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் கோவில் குருக்கள் செய்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொன்முடி, சாமிநாதன் திமுக துணைப் பொதுச் செயலாளர்கள்: மு.க. ஸ்டாலின்

தமிழ்நாட்டின் முறைசாரா பெண் தொழிலாளர்களின் போராட்டம்: வலுசேர்க்கும் தொழிற்சங்கம்!

உ.பி. மதுராவில் 10 வயது தலித் சிறுமி பாலியல் வன்கொடுமை

இரு மாவட்டங்களில் இன்று கனமழை!

துக்கத்தில் முடிந்த திருமணக் கொண்டாட்டம்! பேருந்து விபத்தில் சகோதரிகள் மூவர் பலி!

SCROLL FOR NEXT