தமிழ்நாடு

மகளிர் உரிமைத்தொகை: நிபந்தனைகளை மறுபரிசீனை செய்ய மார்க்சிஸ்ட் கம்யூ. வலியுறுத்தல்

DIN

திண்டுக்கல்: மகளிர் உரிமைத்தொகை வழங்கும் விவகாரத்தில், சில நிபந்தனைகளை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் வலியுறுத்தினார்.

திண்டுக்கல்லில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் மேலும் கூறியதாவது:

தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனைக்கு எதிராகவும், போதைப் பழக்கத்திற்கு எதிராகவும் தீவிரமாக செயல்பட்டு வந்த சேலம் மாவட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் பெரியசாமி மீது திமுக பிரமுகர் கடும் தாக்குதலை நடத்தியுள்ளார்.

சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது தமிழக அரசு கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தமிழகத்தில் தக்காளி சின்ன வெங்காயம், விலை அதிகரித்ததைத் தொடர்ந்து நியாய விலைக் கடைகளில் அவற்றை விற்பனை செய்வதற்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. 

விளைபொருள்களின் விலை அதிகரித்த நேரங்களில் மட்டுமின்றி, அனைத்து காலங்களிலும் இந்த நடவடிக்கை தொடர வேண்டும். பருத்தி குவிண்டாலுக்கு ரூ.7,000 என மத்திய அரசு விலை நிர்ணயம் செய்துள்ளது.

மத்திய அரசு கொள்முதல் செய்ய முன்வராதபட்சத்தில், தமிழகத்தில் உள்ள நூர்பாலைகளின் தேவைக்காக தமிழக அரசே பருத்தி கொள்முதல் செய்வதற்கு முன்வர வேண்டும்.

இந்து சமய அறநிலைத்துறை இல்லாமல் போனால் கோயில் சொத்துக்கள் அபகரிக்கப்பட்டு விடும். அரசின் நலத்திட்ட உதவிகள் வசதி படைத்தவர்களுக்கு வழங்கப்படக் கூடாது. ஆனாலும் மகளிருக்கான உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தில் விதிக்கப்பட்டுள்ள சில நிபந்தனைகளை மறுபரிசீலனை செய்வதற்கு தமிழக அரசு முன்வர வேண்டும் என்றார் அவர்.

அப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர்கள் மதுக்கூர் ராமலிங்கம், பாண்டி, மாவட்டச் செயலர் சச்சிதானந்தம் ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று நல்ல நாள்!

இன்று யோகம் யாருக்கு?

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

SCROLL FOR NEXT