முகப்பு
தமிழ்நாடு

ஜி-20 மாநாடு: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு!

தில்லியில் நடைபெறவுள்ள ஜி20 மாநாட்டில் கலந்துகொள்ள முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ் நேரில் அழைப்பு விடுத்துள்ளார்.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:03 PM
சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ் சந்திப்பு
பகிர்:

தில்லியில் நடைபெறவுள்ள ஜி20 மாநாட்டில் கலந்துகொள்ள முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ் நேரில் அழைப்பு விடுத்துள்ளார்.

மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் சென்னை வந்துள்ள நிலையில் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். 

இதன் தொடர்ச்சியாக சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்துப் பேசினார். 

அப்போது தில்லியில் வருகிற செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள ஜி20 மாநாட்டிற்கு அழைப்பு விடுத்துள்ளார். 

அப்போது தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ. வீ. மெய்யநாதன், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர். 

ஜி20 அமைப்பின் தலைவராக இந்தியா கடந்த டிசம்பர் 1 ஆம் தேதி பொறுப்பேற்றது. இதையொட்டி நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் 200க்கும் மேற்பட்ட கூட்டங்கள் நடத்தப்படவுள்ளன. இறுதியாக ஜி20 தலைவர்கள் உச்சி மாநாடு தில்லியில் செப்டம்பர் 9, 10 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. 

முழு கட்டுரையைப் படிக்க →