தமிழ்நாடு

இனி சனிக்கிழமைகளிலும் செயல்படுமா ஆர்டிஓ அலுவலகங்கள்?

சென்னையில் உள்ள அனைத்து மண்டல போக்குவரத்து அலுவலகங்களையும் சனிக்கிழமையும் இயங்க வைக்க தமிழக போக்குவரத்துத் துறை முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.

DIN

சென்னை: சென்னையில் உள்ள அனைத்து மண்டல போக்குவரத்து அலுவலகங்களையும் சனிக்கிழமையும் இயங்க வைக்க தமிழக போக்குவரத்துத் துறை முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.

சென்னையில் உள்ள அனைத்து மண்டல போக்குவரத்து அலுவலகங்களுக்கும் வாரந்தோறும் கிட்டத்தட்ட 40 ஆயிரம் ஓட்டுநர் உரிமம் கோரி விண்ணப்பங்கள் வந்து சேர்கின்றன. ஆனால், அவை அனைத்தையும் பரிசீலித்து முடிக்க போக்குவரத்து அலுவலகங்களால் முடியவில்லை. உதாரணமாக, சென்னையில் உள்ள ஒரு போக்குவரத்து அலுவலகத்துக்கு ஒரு வாரத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓட்டுநர் உரிமம் கோரி விண்ணப்பங்கள் வரப்பெற்றால், அந்த வாரத்தில், ஓட்டுநர் உரிமத்தை பரிசீலித்து, சோதனைகள் நடத்தி முடித்து வெறும் 1000 விண்ணப்பதாரர்களுக்கே ஓட்டுநர் உரிமம் வழங்கப்படுகிறது.

இப்படி ஒரு வாரத்தில் இரண்டாயிரம் விண்ணப்பங்கள் நிலுவையில் வைக்கப்பட்டால், மாதக்கணக்கில் செல்லும் போது இது பல ஆயிரங்களாக அதிகரிக்கின்றன. இதனால், போக்குவரத்து ஆலுவலகங்களில் ஏராளமான விண்ணப்பங்கள் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலைமையை ஆலோசித்த தமிழ்நாடு போக்குவரத்து ஆணையர், சென்னையில் உள்ள அனைத்து போக்குவரத்து அலுவலகங்களும் சனிக்கிழமையும் செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதாவது, நிலுவையில் உள்ள விண்ணப்பங்களை முடிக்கவும், அலுவலகம் செல்லும் விண்ணப்பதாரர்கள் பயன்பெறும் வகையிலும், போக்குவரத்து அலுவலகங்கள் சனிக்கிழமையும் செயல்படும் எனறும் அவர் தெரிவித்திருப்பதாகக் கூறப்படுகிறது.

மேலும், இ-சேவைகள் சனிக்கிழமையிலும் முழுமையாக செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதனால், ஓட்டுநர் உரிமம் பெற விண்ணப்பித்துக் காத்திருப்பவர்களும், விண்ணப்பிக்க திட்டமிட்டிருப்பவர்களுக்கும் விரைவாக ஓட்டுநர் உரிமம் கிடைக்க வழிவகை ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அருணாசலேஸ்வரா் கோயில் முன் வியாபாரிகளுக்கு கடை கட்ட அனுமதி கோரி மனு

விதிமீறல்:178 வாகனங்களுக்கு ரூ.26 லட்சம் அபராதம்

வந்தே பாரத் ரயில் மீது கல் எறிந்தவா் கைது

கூட்டுறவு வங்கிப் பணியாளா்கள் 2 ஆவது நாளாக வேலைநிறுத்தம்

பள்ளி மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல்: கராத்தே பயிற்சியாளருக்கு 20 ஆண்டு சிறை

SCROLL FOR NEXT