சுதந்திர போராட்ட வீரரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான சங்கரய்யாவின் பிறந்தநாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதல்வர் தனது ட்விட்டர் பக்கத்தில், 'பொதுவுடைமை இயக்கத்தின் முதுபெரும் தலைவர் 'தகைசால் தமிழர்' சங்கரய்யாவின் 102-ஆவது பிறந்தநாள்! பொதுவாழ்விலும் பொதுவுடைமை இலட்சியங்களைக் கடைப்பிடிப்பதிலும் நம் எல்லோருக்கும் வழிகாட்டியாக விளங்கும் அவர் நலமுடன் வாழிய பல்லாண்டு!' என்று பதிவிட்டு வாழ்த்துக் கூறியுள்ளார்.
சங்கரய்யாவின் பிறந்தநாளையொட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிட்ஸ்ட் கட்சியினர் மற்றும் பிற கட்சித் தலைவர்கள் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.