ஆடி மாத சீர்வரிசையாக கொண்டுவரப்படும் தக்காளி 
தமிழ்நாடு

ஆடி மாத சீர்வரிசையில் இடம்பிடித்த தக்காளி! வியப்பை ஏற்படுத்திய பெண் வீட்டார்!!

பெண் வீட்டாரின் ஆடி மாத சீர்வரிசையில் இடம்பிடித்த தக்காளி, தற்போது மக்கள் மத்தியில் பேசும் பொருளாகிவிட்டது.

DIN


வேலூர்: பெண் வீட்டாரின் ஆடி மாத சீர்வரிசையில் இடம்பிடித்த தக்காளி, தற்போது மக்கள் மத்தியில் பேசும் பொருளாகிவிட்டது.

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பத்தைச் சேர்ந்த  கனிஷ்குமாருக்கும், பள்ளிகொண்டாவை சேர்ந்த லீலா பிரியாவுக்கும் சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

புதிதாகத் திருமணமாகி ஓராண்டுக்கு உள்ளான, மணப்பெண்ணைத் தாய் வீட்டார் சீர்வரிசை கொடுத்து மணமகன் இல்லத்திலிருந்து தங்கள் வீட்டிற்கு அழைத்துச் செல்வது வழக்கம். 

மாம்பழம், திராட்சை, இனிப்பு பலகாரங்கள், தேங்காய் வரிசையில் இடம்பெற்றுள்ள தக்காளி.

ஆடி மாதம் முடியும் வரை தாய் வீட்டில் வைத்திருந்து, பிறகு ஒரு நல்லநாள் பார்த்து புகுந்த வீட்டிற்கு அனுப்பி வைப்பார்கள். 

அந்த வகையில் லீலா பிரியாவின் பெற்றோர் ஆடி மாதம் சீர்வரிசை வைத்து லீலா பிரியாவையும், மருமகனையும் தங்கள் வீட்டுக்கு அழைத்துச் செல்ல திட்டமிட்டனர். 

அதாவது, 25 வகையான பொருட்களை சீர்வரிசையாக வைத்தனர். அதில் மாம்பழம், திராட்சை, இனிப்பு பலகாரங்கள், தேங்காய் வரிசையில் தக்காளிப் பழத்தையும் மதிப்பிற்குரியதாக வைத்து பெண்ணை அழைத்துச் சென்றனர்.  

தற்போது ஒரு கிலோ தக்காளி ரூ.100 முதல் ரூ.200 வரை விற்பனை செய்யப்படுவதால் மக்கள் மத்தியில் பேசும் பொருளாகிவிட்டது.

இதன் காரணமாக, சீர்வரிசையில் வைக்கப்படும் தக்காளி, புகுந்த வீட்டில் சமையலுக்கு பயன்படும் என்பதால் தக்காளி சீர்வரிசையை புகுந்த வீட்டில் மகிழ்ச்சியாக ஏற்றுக்கொண்டனர். உயர்ரக பழங்களுடன் சீர்வரிசை தட்டில் வைக்கப்படும் அளவிற்கு தக்காளி, சீர்வரிசையில் இடம்பெற்றிருந்தது வியப்பாக இருந்தது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

“Button Phone போதும்!” எனக்கு போனில் பேசப் பிடிக்காது! கேப்டன் எம்.எஸ்.தோனி

தமிழகத்தில் 5 நாள்களுக்கு கனமழை! எந்தெந்த மாவட்டங்களில்?

ருதுராஜ் வருகிறார், மினி ஏலத்தில் ஓட்டைகளை அடைப்போம்: எம்.எஸ்.தோனி

கோவை வந்த தோனிக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு

இந்தியன் வங்கியில் 1500 பட்டதாரிகளுக்கு அப்ரண்டிஸ் பயிற்சி!

SCROLL FOR NEXT