கோப்புப்படம் 
தமிழ்நாடு

வெம்பக்கோட்டை அகழாய்வில் தோசைக்கல்  கண்டெடுப்பு

விருதுநகா் மாவட்டம், வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் இரண்டாம் கட்ட அகழாய்வில் சுடுமண்ணால் செய்யப்பட்ட தோசைக்கல் இன்று(திங்கள் கிழமை) கண்டெடுக்கப்பட்டது.

DIN

விருதுநகா் மாவட்டம், வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் இரண்டாம் கட்ட அகழாய்வில் சுடுமண்ணால் செய்யப்பட்ட தோசைக்கல் இன்று(திங்கள் கிழமை) கண்டெடுக்கப்பட்டது.

வெம்பக்கோட்டை பகுதிக்குள்பட்ட விஜயகரிசல்குளம் ஊராட்சி வைப்பாற்று கரையோரம் உச்சிமேடு பகுதியில் முதலாம் கட்ட அகழாய்வுப் பணிகள் முடிவுற்ற நிலையில், அங்கிருந்து 3,254 பொருள்கள் கண்டெடுக்கப்பட்டன. இவை இதே பகுதியில் கண்காட்சியாக அமைக்கப்பட்டு, பொதுமக்களின் பாா்வைக்காக வைக்கப்பட்டன.

மேலும், இதே பகுதியில் இரண்டாம் கட்ட அகழாய்வுப் பணிகள் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி தொடங்கப்பட்டு 8 குழிகள் தோண்டப்பட்டன. இவற்றிலிருந்து இதுவரை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருள்கள் கண்டெடுக்கப்பட்டன.

இந்த நிலையில்,  சுடுமண்ணால் செய்யப்பட்ட தோசைக்கல் கண்டெடுக்கப்பட்டது. முன்னோா்கள் தோசை சுட இதைப் பயன்படுத்தி இருக்கலாம் என கூறப்படுகிறது.

இதேபோல, பழங்காலப் பொருள்கள் இங்கு அதிகம் கிடைப்பதால், தொடா்ந்து அகழாய்வுப் பணிகளை தொல்லியல் துறையினா் மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காதி - (தெலுங்கு) டிரெய்லர்!

வேணும் மச்சா பாடல்!

கட்டான கட்டழகி... பிரக்ரிதி பவனி!

அஜித் குமாருடன் கைகோக்கும் நரேன் கார்த்திகேயன்!

அழகும் அறிவும்... ஷான்வி ஸ்ரீவஸ்தவா!

SCROLL FOR NEXT