நாகை ஆட்சியரகத்தில் தீ விபத்து 
தமிழ்நாடு

நாகை ஆட்சியரகத்தில் தீ விபத்து: அதிகாரிகள், மக்கள் வெளியேற்றம்

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் மனு அளிக்க வந்தவர்கள் மற்றும் அதிகாரிகள் அலறியபடி வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

DIN

நாகப்பட்டினம்: நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் மனு அளிக்க வந்தவர்கள் மற்றும் அதிகாரிகள் அலறியபடி வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வழக்கம்போல திங்கள்கிழமை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்கள் கோரிக்கையை வலியுறுத்தி மனு அளிக்க ஆட்சியர் அலுவலகத்தில் திரண்டு இருந்தனர்.

அப்போது முற்பகல் 11.50 மணியளவில் திடீரென ஆட்சியர் அலுவலக மூன்றாவது தளத்தில் உள்ள அரசு கேபிள் டிவி அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டு புகைமூட்டம் கிளம்பியது.

இதையெடுத்து ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் மற்றும் அலுவலகத்தில் மூன்று தளங்களிலும் உள்ள அலுவலர்கள் உடனடியாக வெளியேறினர். அதிகாரிகள் மற்றும் மனு அளிக்கவந்த பொதுமக்கள் சிலர் அலறியடித்தபடி வெளியேறியதால் பரபரப்பு நிலவியது.

நாகை தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வங்கக்கடலில் புயல் சின்னம்: சென்னை, புறநகரில் 3 நாள்களுக்கு மழை!

ரூ.2 லட்சம் சம்பளத்தில் தேசிய நெடுஞ்சாலைத் துறையில் வேலை வேண்டுமா?

மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு!

டி20-ல் புது வரலாறு..! தரவரிசையில் சாதனையுடன் முதலிடத்தில் அபிஷேக் சர்மா!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இயல்பைவிட அதிகமாக பெய்யும்!

SCROLL FOR NEXT