மகளிர் உரிமைத்தொகை: தகுதியானவர்கள் விடுபடக் கூடாது!
சென்னை தலைமை செயலகத்தில் கண்காணிப்பு அலுவலர்களுடன் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.
மகளிருக்கு மாதம் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் எந்தவொரு தகுதியான பயனாளியும் விடுபட்டுவிடக் கூடாது என தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை தலைமை செயலகத்தில் கண்காணிப்பு அலுவலர்களுடன் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.
இதில், கண்காணிப்பு அலுவலர்கள் அனைத்து மாவட்டங்களுக்கும் நேரில் சென்று களஆய்வுப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
ஜூலை 19ஆம் தேதி முதல் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள கண்காணிப்பு அலுவலர்கள் தகுதியான மகளிர் குறித்து கள ஆய்வு மேற்கொண்டு தரவுகளை சேகரிக்க வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.