தமிழ்நாடு

உம்மன் சாண்டி உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில் அஞ்சலி

கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டியின் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். 

DIN

கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டியின் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். 

கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி உடல்நலக்குறைவால் பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் இன்று(செவ்வாய்கிழமை) காலமானார். இவர் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராகவும் இருந்தார். 

உம்மன் சாண்டி மறைந்த நிலையில் அவரது உடல் கர்நாடக அமைச்சர் ஜான் வீட்டில் தலைவர்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. 

பின்னர் அவரது சொந்த ஊரான கேரள மாநிலம் திருவனந்தபுரம் கோட்டயம் கொண்டு செல்லப்படுகிறது. 

உம்மன் சாண்டியின் உடலுக்கு பெங்களூருவில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். முதல்வர் மு.க.ஸ்டாலினும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். 

முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது இரங்கல் பதிவில், 'கேரள மாநில முன்னாள் முதலமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான உம்மன் சாண்டிக்கு இறுதி மரியாதை செலுத்தினேன். அவர் ஒரு சிறந்த அரசியல் ஆளுமை மற்றும் பொது சேவைக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்த ஒரு உண்மையான மக்கள் தலைவர்.

உம்மன் சாண்டியின் குடும்பத்தினருக்கும், கேரள மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்' என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அக். 3 பொது விடுமுறை நாளாக அறிவிக்கப்படுமா?

கரூர் செல்லாதது ஏன்? விடியோ வெளியிட்டார் தவெக தலைவர் விஜய்

திருவண்ணாமலை பாலியல் வன்கொடுமை: முதல்வர் என்ன பதில் வைத்துள்ளார்?

“கரூர் பலி: திட்டமிடப்பட்டதா?” அமைச்சர் Anbil Mahesh பதில்! | Karur | TVK | VIJAY | DMK

பாஜக கூட்டணியில் இணைவதற்கு பதில் ராஜிநாமா செய்துவிடுவேன்: ஒமர் அப்துல்லா!

SCROLL FOR NEXT