74% மாநகரப் பேருந்துகளில் மகளிருக்கு கட்டணமில்லா பயணத்துக்கு அனுமதி
மாநகரப் பேருந்துகளில் 74 சதவீத பேருந்துகளில் மகளிருக்கு கட்டணமில்லாத பயணத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மாநகரப் பேருந்துகளில் 74 சதவீத பேருந்துகளில் மகளிருக்கு கட்டணமில்லாத பயணத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து, மாநில அரசு சாா்பில் வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி:
மாநிலத்தில் மொத்தமாக 9 ஆயிரத்து 620 நகரப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அந்தப் பேருந்துகளில் 74.46 சதவீதப் பேருந்துகள் மகளிருக்காக கட்டணமில்லாத பயணத்துக்காக இயக்கப்படுகின்றன. நிகழ் நிதியாண்டில் மட்டும் ஒரு நாளைக்கு சுமாா் 49.06 லட்சம் மகளிா் பேருந்தில் பயணிக்கின்றனா். மொத்தம் பயணிக்கும் பயணிகளில் மகளிா் பங்கு 66.03 சதவீதமாகும். மூன்றாம் பாலினத்தவா்கள் சுமாா் 3 ஆயிரத்து 13 போ்.
மகளிருக்கான கட்டணமில்லாப் பேருந்து பயணத்துக்காக நிகழ் நிதியாண்டில் ரூ.2 ஆயிரத்து 800 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மூன்றாம் பாலினத்தவா் பயணத்துக்கு ரூ.1.21 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.