தமிழ்நாடு

சாத்தூர் அருகே வெம்பக்கோட்டை அகழ்வாராய்ச்சியில் பச்சைகுத்த பயன்படும் அச்சு கண்டுபிடிப்பு

எம். ஆனந்த்குமார்

சாத்தூர்: சாத்தூர் அருகே வெம்பக்கோட்டை அகழ்வாராய்ச்சியில் பச்சைகுத்த பயன்படும் அச்சுகண்டறியப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே வெம்பக்கோட்டை அருகே வைப்பற்றின் வடகரையில் அமைந்துள்ள விஜயகரிசல்குளம் ஊராட்சிகுட்பட்ட உச்சிமேட்டில் 25 ஏக்கர் பரப்பளவிலான தொல்லியல் மேட்டில் கடந்த மார்ச் 16 ஆம் தேதி முதல் இரண்டாம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த அகழாய்வில் முன்னதாக சுடுமண்ணால் ஆன  பகடைக்காய், தக்களி, ஆட்டக்காய்கள், முத்து மணிகள், சங்கு வளையல்கள், சுடு மண்ணால் செய்யப்பட்ட விளையாட்டுப் பொருட்கள், அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய சுடு மண், அகல்விளக்கு, யானை தந்தால் செய்யப்பட்ட அணிகலன் மற்றும் பதக்கம், சுடுமண்ணால் ஆன தொங்கட்டான்,  2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட, காலத்தால் அழியாத கலை நயம் மிக்க கண்கவர் குவளை என 2850-க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் தற்பொழுது பூ படம் வரையப்பட்ட உடலில் பச்சை குத்த பயன்படும் அச்சு கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் அப்போதைய தொன்மையானவர்கள் அழகு சாதன பொருட்கள் பழக்கம் கொண்டுள்ளதை உறுதி செய்வதாக தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்லோவாகியா பிரதமர் மீது துப்பாக்கிச்சூடு: மோடி கண்டனம்

பத்திரிகையாளரின் சுதந்திரத்தை பறித்ததற்கான தண்டனையை யார் செலுத்துவார்கள்? - ப.சிதம்பரம் கேள்வி

இனி விஜயகாந்தை போல் ஒருவரை பார்க்க முடியாது: ரஜினி உருக்கம்

ஆம்னி பேருந்தில் பயணித்த ஐடி பெண் ஊழியர் இறந்த நிலையில் மீட்பு

அயோத்தியில் ஜெயிக்குமா பாஜக?

SCROLL FOR NEXT