தமிழ்நாடு

தமிழ்நாட்டில் இன்று முதல் 7 நாள்களுக்கு மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் திங்கள்கிழமை(ஜூலை 24) முதல் 7 நாள்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

DIN


சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் திங்கள்கிழமை(ஜூலை 24) முதல் 7 நாள்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

தென்மேற்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில் வால்பாறை வட்டாரத்தில் தினமும் சாரல் மழை பெய்து வந்தது. இந்தநிலையில் கடந்த 20 நாட்களாக அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. கடந்த சனிக்கிழமை காலை தொடங்கிய மழை தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை இரவு வரை நீடித்தது.

தொடா் மழையால் வால்பாறை பகுதியில் கடும் குளிா் நிலவுகிறது. 

உதகை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 4 நாட்களுக்கும் மேலாக பலத்த காற்றுடன் தொடா் சாரல் மழையும், அவ்வப்போது கனமழையும் பெய்து வருகிறது. 

இந்த நிலையில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் திங்கள்கிழமை(ஜூலை 24) முதல் 7 நாள்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் இன்று திங்கள்கிழமை ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பூக்கி டிரைலர்!

‘ஆட்சியில் பங்கு.. கூட்டணியில் குழப்பம் என்ற பேச்சுக்கே இடமில்லை’ - எடப்பாடி பழனிசாமி!

எல்ஜி எலக்ட்ரானிக்ஸ் 3வது காலாண்டுன் லாபம் 62 சதவீதம் சரிவு!

டி20 உலகக் கோப்பை: ரூதர்போர்ட் சிக்ஸர் மழை! இங்கிலாந்துக்கு 197 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மே.இ.தீவுகள்!

எல்லையில் கண்ணிவெடி விபத்தில் ராணுவ வீரர் படுகாயம்!

SCROLL FOR NEXT