தமிழ்நாடு

சிறையில் செந்தில் பாலாஜிக்கு சலுகை எதுவும் வழங்கப்படவில்லை: அமைச்சர் எஸ். ரகுபதி 

சிறையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சிறப்புச் சலுகைகள் எதுவும் வழங்கப்படவில்லை என்று சட்டம் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் எஸ். ரகுபதி தெரிவித்தார்.

DIN

புதுக்கோட்டை: சிறையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சிறப்புச் சலுகைகள் எதுவும் வழங்கப்படவில்லை என்று சட்டம் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் எஸ். ரகுபதி தெரிவித்தார்.

புதுக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை காலை அவர் அளித்த பேட்டியில் தெரிவித்திருப்பதாவது:

புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஏதோ சிறப்புச் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதாக சிலர் கூறிவருகின்றனர்.

சிறைச்சாலை விதிகளின்படி முதல் வகுப்புப் பிரிவில் உள்ளோருக்கு என்ன சலுகைகள் உண்டோ அது மட்டும்தான் வழங்க முடியும். அமைச்சர் என்ற முறையிலோ, திமுகவைச் சேர்ந்தவர் என்ற முறையிலோ செந்தில்பாலாஜிக்கு எவ்வித கூடுதல் சலுகைகளும் வழங்கப்படவில்லை. 

அதை முதல்வரும் அனுமதிக்க மாட்டார். கோடநாடு வழக்கில் குற்றவாளிகளைக் கைது செய்யக்கோரி ஓ. பன்னீர்செல்வம் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளார்.

காவல் துறையினர் முறையாக விசாரித்து வருகின்றனர். குற்றவாளிகள் எந்த உயர் பதவியில் இருந்தாலும் கைது செய்யப்படுவார் என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருச்செந்தூா் சூரசம்ஹாரத்துக்கு கள்ளச்சந்தையில் சிறப்பு வாகன அனுமதி அட்டை: காவல் துறை மறுப்பு

உண்ணாமலைக்கடையில் இந்து இயக்கங்கள் ஆா்ப்பாட்டம்: 96 போ் கைது

வாக்காளா் பட்டியல் திருத்த ஆலோசனைக்கூட்டம்: திமுக, காங்கிரஸ் கட்சி பிரதிநிதிகள் வெளிநடப்பு

தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி கன்னியாகுமரி வருகை

நாகா்கோவிலில் இன்று விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டம்

SCROLL FOR NEXT