திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் (கோப்புப்படம்) 
தமிழ்நாடு

தென்காசி திமுக மாவட்டச் செயலாளர் நீக்கம்: அதிரடியாக புதிய பொறுப்பாளர் நியமனம்!

தென்காசி திமுக தெற்கு மாவட்ட பொறுப்பாளராக பதவி வகித்து வந்த சிவபத்மநாதன், அப்பொறுப்பில் இருந்து நீக்கம் செய்து திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார். 

DIN


சென்னை: தென்காசி திமுக தெற்கு மாவட்ட பொறுப்பாளராக பதவி வகித்து வந்த சிவபத்மநாதன், அப்பொறுப்பில் இருந்து நீக்கம் செய்து திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார். 

மணிப்பூர் விவகாரம் தொடர்பாக தென்காசி பகுதியில் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன், திமுக பஞ்சாயத்து தலைவி தமிழ்செல்வி உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. 

இந்த வாக்குவாதம் திமுகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியது. 

இந்த நிலையில், தென்காசி திமுக தெற்கு மாவட்ட பொறுப்பாளர் பொறுப்பில் இருந்து சிவபத்மநாதனை நீக்கம் செய்து திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார். 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்காசி தெற்கு மாவட்டக் கழச் செயலாளராகப் பணியாற்றி வரும் பொ.சிவபத்மநாதனை அப்பொறுப்பிலிருந்து விடுவித்து, அவருக்குப் பதிலாக, சுரண்டை நகரச் செயலாளராக பொறுப்பு வகித்து வரும் ஜெயபாலன் தென்காசி தெற்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார். 

ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட நிர்வாகிகள் இருவருடன் இணைந்து பணியாற்றிட வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தடைசெய்யப்பட்ட ‘துரந்தர்’ பட பாடலுடன் என்ட்ரி.. சர்ச்சையில் சிக்கிய பாகிஸ்தான் அதிபர் மகன்!

துல்கர் படத்தில் இணைந்த கயாது லோஹர்!

வினா - விடை வங்கி... முந்தைய ஆண்டு வினாக்கள்! - 9

இந்திய அணியில் விளையாடிய பாகிஸ்தான் கபடி வீரர் மீது நடவடிக்கை!

ஆஷஸ் தொடர் : இங்கிலாந்து வீரர்களை விட அதிக ரன்கள் குவித்த மிட்செல் ஸ்டார்க்!

SCROLL FOR NEXT