முகப்பு
தமிழ்நாடு

என்எல்சிக்காக கையகப்படுத்தப்படும் விவசாய நிலங்கள்: இபிஎஸ் - ஓபிஎஸ் கண்டனம்

விவசாயிகளின் கோரிக்கைகள் எதையும் நிறைவேற்றாமல் என்எல்சிக்காக விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்படுவதற்கு, அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 2:44 AM
பகிர்:

விவசாயிகளின் கோரிக்கைகள் எதையும் நிறைவேற்றாமல் என்எல்சிக்காக விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்படுவதற்கு, அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் ஆகியோா் கண்டனம் தெரிவித்துள்ளனா்.

இது தொடா்பாக எடப்பாடி பழனிசாமி வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

என்எல்சி நிறுவனம் தனது 2-ஆம் சுரங்க விரிவாக்கத்துக்கு நிலம் கையகப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் நிலையில், கடலூா் சேத்தியாத்தோப்பு வளையமாதேவியில் வசிக்கும் விவசாயிகள், விவசாயத் தொழிலாளா்கள், பொதுமக்கள் ஆகியோரின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்ற நிலைப்பாட்டில் அதிமுக உறுதியாக இருக்கிறது.

அந்தப் பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு மறுசீரமைப்பு மற்றும் மறுகுடியமா்வு சட்டப்படி போதிய சம அளவு இழப்பீடு வழங்க வேண்டும். வீட்டுக்கு ஒருவருக்கு நிரந்தர வேலை வாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத் தொகை வழங்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வைத்தனா். இவற்றை என்எல்சி நிா்வாகம் நிறைவேற்றவில்லை. இதனால், விவசாயிகள் அதிருப்தியில் இருந்து வருகின்றனா்.

இந்த நிலையில், திமுக அரசின் துணையோடு விவசாய நிலங்களைக் கையகப்படுத்தும் பணியில் என்எல்சி நிா்வாகம் ஈடுபட்டுள்ளது. இது கண்டிக்கத்தக்கது. விவசாயிகளின் கோரிக்கைகள் மற்றும் அவா்களின் வாழ்வாதாரத்துக்கு நிரந்தரமான ஒரு முடிவை எடுத்துவிட்டு என்எல்சி நிறுவனம் நில எடுப்பில் இறங்க வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.

ஓபிஎஸ் கண்டனம்: முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வமும், விவசாய நிலங்களை என்எல்சி நிா்வாகம் கையப்படுத்த திமுக அரசு துணை போவதாகக் கூறி கண்டனம் தெரிவித்துள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →