ஆலங்குடி: ஆலங்குடி அருகே தோட்டத்தில் அறுந்து கிடந்த மின்கம்பியில் இருந்து மின்சாரம் பாய்ந்து விவசாயி வியாழக்கிழமை உயிரிழந்தார்.
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள அணவயல் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி ப. சக்திவேல்(50). இவர் வியாழக்கிழமை காலை அப்பகுதியில் உள்ள அவரது தோட்டத்திற்கு சென்றுள்ளார். அங்கு அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததில் மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்டத்தில் பலத்த காயமடைந்த சக்திவேல்சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதையும் படிக்க | மேட்டூர் அணை நிலவரம்!
இதுகுறித்து வடகாடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.