முகப்பு
தமிழ்நாடு

மேட்டூர் அணை நிலவரம்!

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 3,343 கன அடியாக அதிகரித்துள்ளது.

Updated On : 27 ஜூலை, 2023 at 10:57 AM
மேட்டூர் அணை (கோப்புப் படம்)
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:13 AM

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 3,343 கன அடியாக அதிகரித்துள்ளது.

கேரளம், கா்நாடக காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடா்ந்து தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. கன மழையினால் கா்நாடக அணைகளான கபினி அணை, கிருஷ்ணராஜ சாகா் அணைகளுக்கு உபரி நீா் தொடா்ந்து அதிகரித்து, அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இவ்விரு அணைகளின் பாதுகாப்புக் கருதி, வினாடிக்கு 20,000 கன அடி வீதம் தண்ணீா் காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கா்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீா் திறக்கப்பட்டு வருவதால், வியாழக்கிழமை காலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 3,343 கனஅடியாக  அதிகரித்துள்ளது.

Advertisement

மேட்டூர் அணை நீர்மட்டம் 65.80 அடியிலிருந்து 64.87 அடியாக சரிந்துள்ளது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 12,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 28.44 டி.எம்.சி. ஆக உள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.