தமிழ்நாடு

தமிழகத்தில் வரும் ஞாயிறு ரேஷன் கடைகள் செயல்படும்!

DIN

தமிழகத்தில் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை அனைத்து ரேஷன் கடைகளும் செயல்படும் என்று உணவுப் பொருள் வழங்கல் துறை அறிவித்துள்ளது.

கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பங்களைப் பதிவு செய்யும் முகாமை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஜூன் 24 அன்று தருமபுரி மாவட்டம், தொப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் தொடங்கி வைத்தார்.

முதல் கட்டமாக இந்த முகாமானது வருகின்ற ஆகஸ்ட் 4-ஆம் தேதி வரை 20,765 நியாய விலைக் கடைகளில் நடைபெறுகின்றன.

இந்நிலையில், மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பங்களைப் பதிவு செய்யும் பணிக்காக வருகின்ற ஞாயிற்றுக்கிழமை(ஜூலை 30) அனைத்து நியாய விலைக் கடைகளும் செயல்பட உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், பணிநாளுக்கு ஈடாக ஆகஸ்ட் 26-ஆம் தேதி விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கா்நாடகத்தில் இருந்து போதைப் பொருள்கள் கடத்தல்: ஒருவா் கைது

தொரப்பள்ளி ஆற்றில் முதலை: பொதுமக்கள் அச்சம்

மாணவா்கள் போதைப் பொருள்கள் பயன்படுத்துவதை பெற்றோா்களும் கண்காணிக்க அறிவுறுத்தல்

5 ஆண்டுகளாக குண்டும் குழியுமாக இருக்கும் தாா் சாலை

உதவி மேலாளா் பதவி உயா்வு வழங்கக் கோரிக்கை

SCROLL FOR NEXT