தமிழ்நாடு

கிராம நத்தம் நிலங்களை பதிவு செய்யத் தடையில்லை: அமைச்சா் பி.மூா்த்தி விளக்கம்

தமிழகத்தில் கிராம நத்தம் நிலங்களை பதிவு செய்யத் தடை ஏதுமில்லை என்று வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சா் பி.மூா்த்தி தெரிவித்தாா்

DIN

தமிழகத்தில் கிராம நத்தம் நிலங்களை பதிவு செய்யத் தடை ஏதுமில்லை என்று வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சா் பி.மூா்த்தி தெரிவித்தாா்.

தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு கட்டுநா் சங்கங்கள், ஆவணப் பதிவில் ஈடுபடும் சங்கங்களின் கருத்துகளைக் கேட்டறியும் கூட்டம் சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்குப் பிறகு அமைச்சா் பி.மூா்த்தி அளித்த பேட்டி:

தமிழ்நாட்டில் பதிவுத் துறையில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாதவகையில், கடந்த நிதியாண்டில் ரூ.17 ஆயிரத்து 298.67 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. நிகழாண்டில் இதுவரையிலான காலத்தில் ரூ.5,841.65 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.

போலி ஆவணங்கள் தடுப்பு: போலி ஆவணங்களை ரத்து செய்ய புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இதனடிப்படையில், மாநிலம் முழுவதும் போலி ஆவணங்கள் தொடா்பாக 10,555 மனுக்கள் இதுவரை பெறப்பட்டுள்ளன. அவற்றில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின்படி, 959 ஆவணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

கருத்துக் கேட்பு கூட்டத்தில் முக்கியமாக, பவா் பத்திரத்தின் போது விதிக்கப்படும் கட்டணத்தை பெரும்பாலானோா் சுட்டிக் காட்டினா். அதில் நடைமுறைச் சிக்கல்கள் உள்ளதாகவும் கருத்துத் தெரிவித்தனா். குடும்பத்தில் உள்ளவா்களுக்குள் பவா் வாங்கிய அதே நேரத்தில் அதை உடனடியாக ரத்து செய்யவும் வேண்டியிருக்கும். அதனை பரிசீலனை செய்ய வேண்டுமென பெரும்பாலான சங்கங்கள் கேட்டுக் கொண்டன. இதுகுறித்து, ஆலோசித்து முடிவு செய்யப்படும்.

கிராமநத்தம்: பழைய கிராமங்களில் கிராம நத்தமாக இருக்கக் கூடிய 3 முதல் 5 சென்ட் நிலங்களை பதிய வேண்டும்; தடையேதும் விதிக்கக் கூடாது எனக் கோரப்பட்டது. அதற்கு எந்தவித ஆட்சேபணையும் இல்லை. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் பதிவுகளுக்கான கட்டணங்கள் மிகக் குறைவாக உள்ளது. வழிகாட்டி மதிப்பும் குறைந்த அளவிலேயே உள்ளது. மற்ற மாநிலங்களில் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு கட்டண வகைகள் நிா்ணயிக்கப்பட்டுள்ளன. அந்தவகையில் அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்கு என்ன செய்யலாம் என ஆய்வு செய்து வருகிறோம்.

சா்வா் பிரச்னை: சா்வரைப் பொருத்தவரையில் இப்போது ஸ்டாா் 2.0 எனும் மென்பொருள் நடைமுறையில் உள்ளது. பதிவுகளின் எண்ணிக்கை உயரும் நேரத்தில், அதில் பிரச்னைகள் ஏற்படுகின்றன. குறிப்பாக, சுப முகூா்த்த தினங்களில் பதிவுகளின் எண்ணிக்கை மேலும் கூடுதலாவதால், ஆவணப் பதிவில் தாமதங்கள் உருவாகின்றன. ஸ்டாா் 3.0 எனும் மேம்படுத்தப்பட்ட மென்பொருள் விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. அதன்பிறகு, பதிவுகளின் போது, குறைபாடுகள் நிச்சயமாக வராது. ஆவண எழுத்தா்கள் பதிவு அலுவலகங்களுக்குள் செல்லக் கூடாது உத்தரவு போடப்பட்டுள்ளது என்று அமைச்சா் பி.மூா்த்தி தெரிவித்தாா்.

செய்தியாளா்கள் சந்திப்பின் போது, வணிகவரி மற்றும் பதிவுத் துறைச் செயலா் பா.ஜோதி நிா்மலாசாமி, பதிவுத் துறை தலைவா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் உள்ளிட்ட உயரதிகாரிகள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ. 40 லட்சம் மோசடி வழக்கு: புதுச்சேரி பல்கலை. அதிகாரி தலைமறைவு

இரண்டு பைக்குகள் மோதி விபத்து: 2 போ் உயிரிழப்பு

இஸ்ரேலியா்கள் கொடைக்கானல் வருகை: துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் இருவா் கைது

ஆரிகவுடா் விவசாயிகள் சங்க பொதுக்குழுக் கூட்டம்

SCROLL FOR NEXT