தமிழ்நாடு

கடலூர் - நெய்வேலி வழித்தடத்தில் பேருந்துகள் நிறுத்தம்!

DIN

கடலூர் - நெய்வேலி வழித்தடத்தில் செல்லும் தொலைதூர அரசுப்  பேருந்துகள் முன்னெச்சரிக்கையாக நிறுத்தப்பட்டுள்ளன.

திருச்சி, தஞ்சை, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு செல்லும் அரசுப் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன.

நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தை விரிவுபடுத்த விவசாயிகளின்  நிலங்கள் கையகப்படுத்தப்படுவதைக் கண்டித்தும், என்எல்சி நிறுவனத்தை வெளியேற வலியுறுத்தியும் நெய்வேலியில் இன்று(வெள்ளிக்கிழமை) பாமக சார்பில் முற்றுகைப் போராட்டம் நடத்தப்பட்டது.

அப்போது பாமகவினர் நிறுவனத்தை முற்றுகையிட  முயன்றபோது காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனால் காவல் துறையினருக்கும் பாமகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 

இதனால் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் அவரது கட்சியினரை காவல்துறையினர் கைது செய்தனர்.

அப்போது போராட்டத்தின் இடையே காவல்துறையினரின் வாகனத்தை போராட்டக்காரர்கள் அடித்து நொறுக்கினர். மேலும் காவல் துறையினர்  மீதும் கல்வீசித் தாக்குதல் நடத்தினர். 

இந்த போராட்டம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு நெய்வேலி - பண்ருட்டி சாலையில் போக்குவரத்து ஓரளவு சீரானது. போராட்டம் நடத்த இடத்தில் காவல் துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT