தமிழ்நாடு

நெய்வேலி போராட்டம்: 300 பேர் கைது!

நெய்வேலியில் சுமார் 25 நிமிடங்கள் நடைபெற்ற போராட்டம் முழுமையாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

DIN

நெய்வேலியில் சுமார் 25 நிமிடங்கள் நடைபெற்ற போராட்டம் முழுமையாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த போராட்டம் தொடர்பாக 300க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தை விரிவுபடுத்த விவசாயிகளின்  நிலங்கள் கையகப்படுத்தப்படுவதைக் கண்டித்தும், என்எல்சி நிறுவனத்தை வெளியேற வலியுறுத்தியும் நெய்வேலியில் இன்று(வெள்ளிக்கிழமை) பாமக சார்பில் முற்றுகைப் போராட்டம் நடத்தப்பட்டது.

அப்போது பாமகவினர் நிறுவனத்தை முற்றுகையிட  முயன்றபோது காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனால் காவல் துறையினருக்கும் பாமகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 

இதனால் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் அவரது கட்சியினரை காவல்துறையினர் கைது செய்தனர்.

அப்போது போராட்டத்தின் இடையே காவல்துறையினரின் வாகனத்தை போராட்டக்காரர்கள் அடித்து நொறுக்கினர். மேலும் காவல் துறையினர்  மீதும் கல்வீசித் தாக்குதல் நடத்தினர். 

கடலூர் - நெய்வேலி வழித்தடத்தில் செல்லும் தொலைதூர அரசுப்  பேருந்துகள் முன்னெச்சரிக்கையாக நிறுத்தப்பட்டுள்ளன. திருச்சி, தஞ்சை, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு செல்லும் அரசுப் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன.

இந்த போராட்டம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு நெய்வேலி - பண்ருட்டி சாலையில் போக்குவரத்து ஓரளவு சீரானது. போராட்டம் நடத்த இடத்தில் காவல் துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமர்நாத் யாத்திரை செல்ல நாளைமுதல் அனுமதியில்லை! காஷ்மீர் நிர்வாகம் அறிவிப்பு

ஏ சான்றிதழ் பெற்ற ரஜினி திரைப்படங்கள்!

எங்கள் கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் வெளியேறாது: அமைச்சர் கே.என்.நேரு

பாலியல் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை!

ஓவல் டெஸ்ட்டில் டிஆர்எஸ் சர்ச்சை; கள நடுவர் செய்தது சரியா?

SCROLL FOR NEXT