மு.க. ஸ்டாலின் (கோப்புப் படம்) 
தமிழ்நாடு

கொள்கை வாரிசுகளை வளர்த்தெடுத்துக்கொண்டே இருக்க வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்

கொள்கை வாரிசுகளை வளர்த்தெடுத்துக்கொண்டே இருக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

DIN

கொள்கை வாரிசுகளை வளர்த்தெடுத்துக்கொண்டே இருக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், இன்று நாம் காணும் தமிழ்நாடு 100 ஆண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்தது? இன்று எப்படி மாறியிருக்கிறது? இங்கு எதுவும் தானாக மாறிவிடவில்லை. 

ஓர் இயக்கத்தின், அதன் தலைவர்களின் இடைவிடாத, சோர்வுறாத உழைப்பும் தியாகமும்தான் தேய்ந்து கிடந்த தெற்கை வளர்ந்த நாடுகளுக்கு இணையாக வளப்படுத்தியிருக்கிறது.

இந்த வரலாற்றை இளந்தலைமுறையினரிடம் எடுத்துச் செல்லும் கடமை கட்சியின் ரத்த நாளங்களான இளைஞரணியினருக்கு உண்டு! கொள்கை வாரிசுகளை வளர்த்தெடுத்துக்கொண்டே இருக்க வேண்டும்!

அந்தப் பணியைச் சிறப்பாகச் செய்து - இளைஞரணியினருக்கு எடுத்துக்காட்டாகச் செயல்படும் தம்பி உதயநிதிக்கு வாழ்த்துகள்! தொடரட்டும் உங்கள் பணி!

எண்ணிக்கையில் மட்டும் அல்ல, எண்ணத்திலும் கொள்கையிலும் வலிமையோடு இருந்தால்தான் இந்த இயக்கம் இன்னும் பல நூறாண்டுகள் இன எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடிக்க முடியும்!

கொள்கைப்படை திரட்டி இனப்பகை விரட்டுவோம்! இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய சினிமாவிலேயே பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா!

டெஸ்ட்டில் வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய நியூசி. வீரர் டெவான் கான்வே!

நேஷனல் ஹெரால்டு அமலாக்கத் துறையால் ஜோடிக்கப்பட்ட வழக்கு: ப.சிதம்பரம்

தென்னாப்பிரிக்கா: துப்பாக்கிச் சூட்டில் 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி!

15 புதிய அரசு பேருந்துகள்! கொடியசைத்து துவக்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் | நெல்லை | DMK

SCROLL FOR NEXT