மகளிர் முன்னேற்றத்திற்கான அரசின் திட்டங்களுக்கு தோழி விடுதிகள் திட்டம் மேலும் வலுசேர்க்கும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், தோழி விடுதிகள் - இது முன்னேறும் மகளிர்க்கான முகவரி!
மகளிர்க்குச் சொத்துரிமை, உள்ளாட்சியில் 33 விழுக்காடு ஒதுக்கீடு, உயர்கல்வியை ஊக்குவிக்கும் புதுமைப்பெண் திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் என மகளிர் முன்னேற்றத்துக்கான நமது திட்டங்களுக்கு மேலும் வலுசேர்க்கும் திட்டம் இது!
இதையும் படிக்க- ஒகேனக்கல் அருவிகளில் கூடுதல் பாதுகாப்புடன் குளிப்பதற்கு அனுமதிக்க சுற்றுலா பயணிகள் கோரிக்கை
டாக்டர் நடேசனாரின் 'திராவிடர் இல்லம்' போல், நமது திராவிட மாடல்-இன் தோழி விடுதிகளும் வரலாற்றின் பக்கங்களில் நிலைக்கொள்ளும்! இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.