தமிழ்நாடு

புதுச்சேரியில் பெரிய சந்தை கடைகளை அடைத்து வியாபாரிகள் போராட்டம்: காங்கிரஸ் கூட்டணி ஆதரவு

புதுச்சேரியில் பெரிய சந்தை கடை வியாபாரிகளின் போராட்டத்துக்கு காங்கிரஸ் கூட்டணி ஆதரவு தெரிவித்துள்ளது. 

DIN

புதுச்சேரியில் பெரிய சந்தை கடை வியாபாரிகளின் போராட்டத்துக்கு காங்கிரஸ் கூட்டணி ஆதரவு தெரிவித்துள்ளது. 

புதுச்சேரியில் பொலிவுரு நகரம் திட்டத்தைக் கண்டித்து அங்கு கடை வைத்திருக்கும் வியாபாரிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்திற்கு ஏஐடியூசி உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன. போராட்டத்தை முன்னிட்டு திங்கட்கிழமை பெரிய சந்தையில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. மேலும் நேரில் வீதியில் உள்ள கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. 

பெரிய சண்டை முகப்பில் கருப்பு கொடியும் ஏற்றப்பட்டிருந்தது. அதை எடுத்து காங்கிரஸ் கூட்டணி சார்பில் நகராட்சியைக் கண்டித்து, வியாபாரிகளுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் முதல்வர் வே. நாராயணசாமி, முன்னாள் அமைச்சர் மு கந்தசாமி, எம்எல்ஏ வைத்தியநாதன், எதிர்க்கட்சித் தலைவர் ஆர். சிவா, இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் சலீம், மார்க்சிஸ்ட் டைலர் ஆர் ராஜாங்கம், முன்னாள் எம்பி கண்ணன், மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் முருகன், அனந்தராமன்  உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

போராட்டத்தை அடுத்து பல கோடி ரூபாய் காய்கறி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

என் கனவுகளின் பெண்ணாகும் கடின உழைப்பில்... கீர்த்தி ஷெட்டி!

சின்ன ரோல் மாதிரி தோன்றுகிறதா?... சோனு தாக்குர்!

கடந்த மாதம் வீட்டை விட்டு வெளியேறினேன், சான்று... துஷாரா விஜயன்!

இரவுக்கு ஆயிரம் கண்கள்... ஸ்ரேயா கல்ரா!

குரூப் 4 தேர்வு: காலிப்பணியிடங்கள் அதிகரிப்பு!

SCROLL FOR NEXT