பென்னாகரம்: ஏரியூர் அருகே சாலை, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி 30க்கும் மேற்பட்ட லம்பாடி இன மலைவாழ் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
ஏரியூர் அருகே அஜ்ஜன அள்ளி ஊராட்சிக்கு உள்பட்ட சிகலரஹள்ளி காங்கேயன் கொட்டாய் பகுதியில் 20க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியில் 50க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் முறையான சாலை வசதி இல்லாததால் கிராம மக்கள் ஒன்றிணைந்து கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு மண் சாலை அமைத்து பயன்படுத்தி வந்தனர்.
கோடை மழையினால் மண் சாலை அரிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் குடியிருப்புகளுக்கு தேவையான தண்ணீர் வசதி இல்லாததால், ஆபத்தான விவசாய கிணற்றிலிருந்து அன்றாட தேவைக்கான தண்ணீரை எடுத்து பயன்படுத்தி வருகின்றனர்.
காங்கேயன் கொட்டாய் பகுதியில் சாலை, கழிப்பிடம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததை கண்டித்தும், மண் சாலையை தார் சாலையாக மாற்றி அமைத்து அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரி 30க்கும் மேற்பட்ட லம்பாடி இன மலைவாழ் மக்கள் ஏரியூர் - சிகலரஹள்ளி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
இதையும் படிக்க: சிறுவாணி அணையின் நீா்மட்டம் சரிவு
இதுகுறித்து தகவல் அறிந்த ஏரியூர் காவல் துறையினர் நிகழ்விடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தியதில் உடன்பாடு எட்டாததால் மறியல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.