தமிழ்நாடு

அக்னி நட்சத்திரம் முடிந்தும் 15 இடங்களில் சதமடித்த வெயில்!

DIN


தமிழ்நாட்டில் இன்று 15 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெயில் பதிவாகியதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் முடிந்த பிறகும் கூட வெயிலின் தாக்கம் குறைந்தபாடில்லை. கடந்த இரு நாள்களாக தமிழகத்தின் பல பகுதிகளிலும் பரவலாக மழை பெய்த போதிலும் வெயிலின் தாக்கம் அதிகமாகவே உள்ளது.

தமிழகத்தில் இன்று 15 இடங்களில்  100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெயில் பதிவாகியது. அதிகபட்சமாக திருத்தணி, கரூர் பரமத்திவேலூர் ஆகிய பகுதிகளில் 104 டிகிரி ஃபாரன்ஹீட், திருச்சி, பாளையங்கோட்டை, வேலூர் ஆகிய பகுதிகளில் 103 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியது. 

தமிழக உள்பகுதிகளில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை நிலவக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கழிவுநீர் கலப்பு... மஞ்சப்பள்ளம் ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்!

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

புதிய தாா்ச்சாலை; நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு

டெங்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி

இன்று எந்த ராசிக்கு யோகம்!

SCROLL FOR NEXT