தஞ்சாவூரில் புதன்கிழமை நடைபெற்ற ஆர். வைத்திலிங்கம் மகன் திருமண விழாவில் ஒரே மேடையில் பங்கேற்று மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்த முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், அமமுக பொதுச் செயலர் டிடிவி தினகரன். 
தமிழ்நாடு

அதிமுகவுடன் அமமுக இணைந்து செயல்படும்: டிடிவி தினகரன் பேச்சு

அதிமுகவுடன் அமமுக இனிமேல் இணைந்து செயல்படும் என்றார் அமமுக பொதுச் செயலர் டிடிவி தினகரன்.

DIN

தஞ்சாவூர்: அதிமுகவுடன் அமமுக இனிமேல் இணைந்து செயல்படும் என்றார் அமமுக பொதுச் செயலர் டிடிவி தினகரன்.

தஞ்சாவூரில் புதன்கிழமை நடைபெற்ற முன்னாள் அமைச்சர் ஆர். வைத்திலிங்கம் மகன் திருமண விழாவில் பங்கேற்ற அவர் பேசியது:

சிலரின் சுயநலம், பேராசை காரணமாக 6 ஆண்டுகளுக்கு முன்பு அதிமுகவிலிருந்து பிரிந்து கணத்த இதயத்துடன் அமமுகவை தொடங்கினோம். ஆறு ஆண்டுகள் கழித்து அதிமுக நிர்வாகிகள், தொண்டர்களை ஒரே மேடையில் சந்திப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

எங்களுடைய கஷ்டங்களை எல்லாம் புறம் தள்ளிவிட்டு, ஜெயலலிதாவின் உண்மையான ஆட்சியை உருவாக்க வேண்டும் என்பதற்காக ஓ. பன்னீர்செல்வத்துடன் நாங்கள் கைக்கோர்த்துள்ளோம். ஜெயலலிதாவின் ஆட்சியைக் கொண்டு வருவதற்கு அதிமுகவுடன் அமமுக எந்தவிதமான கருத்து வேறுபாடு இல்லாமல் இணைந்து செயல்படும். அதற்கான நல்ல தருணத்தை இந்த திருமண விழா ஏற்படுத்தியுள்ளது என்றார் டிடிவி தினகரன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜெரூசலேமில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு! 5 பேர் பலி!

பாஜகவிலிருந்து விலகிய புதுச்சேரி முன்னாள் தலைவர்!

ஜிஎஸ்டி குறைப்பு: ராயல் என்ஃபீல்டு பைக்குகள் விலையில் மாற்றம்!

ஓடிடியில் கவனம் பெறும் பன் பட்டர் ஜாம்!

தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்களைச் சந்திக்கிறார் பிரதமர் மோடி!

SCROLL FOR NEXT