தமிழ்நாடு

கள்ளக்காதல் தொல்லை: குடும்பத்துடன் சேர்ந்து இளைஞரைக் கொன்ற இளம்பெண்!

தென்காசியில் செல்போனில் விடியோ எடுத்து மிரட்டி உடலுறவு கொண்டுவந்த இளைஞரை, இளம்பெண் தனது குடும்பத்துடன் சேர்ந்து கொலை செய்து கழிவுநீர்த் தொட்டியில் புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

DIN

தென்காசியில் செல்போனில் விடியோ எடுத்து மிரட்டி உடலுறவு கொண்டுவந்த இளைஞரை, இளம்பெண் தனது குடும்பத்துடன் சேர்ந்து கொலை செய்து கழிவுநீர்த் தொட்டியில் புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டம், இலத்தூர் பகுதியை சேர்ந்த லட்சுமணன் என்பவரது வீட்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பராமரிப்பு பணி மேற்கொண்ட போது, அவரது வீட்டில் இருந்த கழிவுநீர் தேக்கத் தொட்டியில் மனித எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக இலத்தூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து எலும்புக் கூடாக மீட்கப்பட்ட நபர் யார்? அவரை கொலை செய்து கழிவுநீர் தேக்கத் தொட்டியில் போட்டது யார்?

மேலும், இலத்தூர் பகுதியில் அதிக நாள்கள் காணமால் போன நபர்கள் யாரேனும் உள்ளார்களா? என்பது குறித்து விசாரணை நடத்தினர்.

இலத்தூர் பகுதியை சேர்ந்த மது என்ற மாடசாமி எனும் கல்லூரி மாணவர் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு காணாமல் போயிருந்ததும், அது தொடர்பான வழக்கு இலத்தூர் காவல் நிலையத்திலும், மதுரை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்ததும் தெரியவந்தது.

அதனைத் தொடர்ந்து, அந்த கண்டெடுக்கப்பட்ட எலும்புக் கூட்டில் இருந்து எடுக்கப்பட்ட டிஎன்ஏவையும், காணாமல் போன கல்லூரி மாணவரான மதுவின் உறவினர்களிடமிருந்து எடுக்கப்பட்ட டிஎன்ஏவையும் சோதனை செய்தபோது இரண்டும் ஒத்துப்போனது.

தொடர்ந்து, மது எப்படி கொலை செய்யப்பட்டார்? அவரை கழிவுநீர் தேக்கத் தொட்டியில் புதைத்தது யார்? என்பது குறித்து மது வீட்டில் அருகே உள்ள அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்த போது, மது காணாமல் போன நாள் முதல் அந்த பகுதியை சேர்ந்த 3 பேர் குடும்பத்துடன் கோவைக்கு வேலைக்கு சென்றதும், அவர்களுக்கு இந்த சம்பவத்தில் தொடர்பு இருக்க வாய்ப்பு உள்ளது என அக்கம் பக்கத்தினர் பரவலாகத் தெரிவித்துள்ளனர்.

உடனே கோவை விரைந்த இலத்தூர் போலீசார் குடும்பத்துடன் கோவையில் இருந்த மாரியம்மாள், இசக்கியம்மாள் மற்றும் அவரது சகோதரர் உள்ளிட்ட மூவரையும் அழைத்து வந்து விசாரணை நடத்திய போது, பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.

அதாவது, கல்லூரி மாணவரான மாடசாமி (எ) மதுவுக்கும், அவரது வீட்டின் எதிரே உள்ள திருமணமான பேச்சியம்மாள் (வயது 24) என்பவருக்கும் இடையே கள்ளகாதல் மலர்ந்த நிலையில், இருவரும் அவ்வப்போது தனிமையில் சந்தித்துள்ளனர்.

அவர்கள் இருவரும் தனிமையில் இருந்ததை மது தனது செல்போனில் விடியோவாக எடுத்து அதை வைத்து பேச்சியம்மாளை மிரட்டி அடிக்கடி உடலுறவு கொண்டுள்ளார்.

ஒரு கட்டத்தில், மதுவின் தொந்தரவு அதிகமாக பேச்சியம்மாள் இந்த சம்பவம் தொடர்பாக அவரது தாயார் மாரியம்மாளிடம் நடந்ததைக் கூறியுள்ளார்.

கள்ளத் தொடர்பை மது தனது கணவரிடம் கூறினால் தனது வாழ்க்கை பாழாகிவிடுமோ என்ற அச்சத்தால், இருவரும் திட்டமிட்டு மதுவை கொலை செய்ய முடிவு செய்துள்ளனர்.

தொடர்ந்து, மதுவை தனிமையில் சந்திக்க இசக்கியம்மாள் அழைத்துள்ளார். அப்போது, மதுவிடம் பேச்சியம்மாள் ஒரு ஆபாச விடியோவை காட்டி அதுபோல உடலுறவு கொள்ள கேட்டுள்ளார்.

உடனே, மதுவும் சம்மதித்து அந்த ஆபாச விடியோவில் இருந்த காட்சிகளை போல் மதுவின் கைகால்களை பேச்சியம்மாள் கட்டியுள்ளார்.

அதனை தொடர்ந்து, மதுவிடம் உறவு வைத்துக் கொள்வது போல் நடித்து அவரது கழுத்தை நெறித்து முகத்தில் தலையணையை வைத்து ழுத்தி மதுவை கொலை செய்துள்ளார்.

பின்னர், மதுவின் உடலை பேச்சியம்மாள், தாயார் மாரியம்மாள், அவரின் சகோதரர் ஆகியோர் உதவியுடன் லட்சுமணன் வீட்டின் செப்டிக் டேங்கில் போட்டு மதுவின் உடலை மூடியது தெரியவந்தது.

தொடர்ந்து, மதுவை திட்டமிட்டு கொலை செய்த பேச்சியம்மாள், மாரியம்மாள் மற்றும் அவரது சகோதரர் தங்கபாண்டி உள்ளிட்ட மூன்று பேரையும் காவல் துறையினர் கைது செய்து செங்கோட்டை குற்றவியல் நீதித் துறை நடுவர் சுனில் ராஜா முன்பு ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

கூட்டுறவு முழுநேர பட்டயப் படிப்பில் சேர காலநீட்டிப்பு

பாஜக ஆளும் மாநிலங்களில் பெண்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்!

சிறு, குறு நிறுவனங்களுக்கு மானிய உதவி

திமுக கூட்டணியில் மமக தொடரும்: எம்.எச். ஜவாஹிருல்லா

SCROLL FOR NEXT