தமிழ்நாடு

உங்களையெல்லாம் கும்பிட வேண்டும்.. தூய்மைப் பணியாளர்களுக்கு நல உதவிகள் வழங்கி அமைச்சர் ஆர்.காந்தி உருக்கம்!

கடவுளுக்கு செய்யும் சேவைக்கு நிகரான தூய்மைப் பணி செய்யும் உங்களை நாங்களெல்லாம் கையடுத்து கும்பிட வேண்டும்

DIN

ராணிப்பேட்டை: கடவுளுக்கு செய்யும் சேவைக்கு நிகரான தூய்மைப் பணி செய்யும் உங்களை நாங்களெல்லாம் கையடுத்து கும்பிட வேண்டும் என ராணிப்பேட்டை நகராட்சி தூய்மைப்  பணியாளர்களுக்கு நல உதவிகள் வழங்கி அமைச்சர் ஆர்.காந்தி உருக்கம் தெரிவித்தார். 

ஜுன் - 3 கருணாநிதி நூற்றாண்டு விழா மற்றும் ஜுன் -5 உலக சுற்றுச்சூழல் நாளை முன்னிட்டு, ராணிப்பேட்டை மாவட்ட திமுக சுற்றுச்சூழல் அணியின் சார்பில், ராணிப்பேட்டை, வாலாஜாப்பேட்டை நகராட்சியை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட  தூய்மைப் பணியாளர்களுக்கு  நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி முத்துடை பேருந்துநிலையத்தில் சனிக்கிழமை காலை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு திமுக சுற்றுச்சூழல் அணியின் மாநில துணைச் செயலாளர் ஆர்.வினோத் காந்தி தலைமை வகித்தார். ராணிப்பேட்டை நகர மன்ற தலைவர் சுஜாதா வினோத், துணைத் தலைவர் சீ.ம.ரமேஷ் கர்ணா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர திமுக  செயலாளர் பி.பூங்காவனம் வரவேற்றார். 

இந்நிகழ்ச்சியில் தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி சிறப்பு  ழைப்பாளராக கலந்து கொண்டு தூய்மைப் பணியாளர்களுக்கு நல உதவிகள் வழங்கி பேசியதாவது: 

தூய்மைப் பணியாளர்களின் பணி பாராட்டப்பட வேண்டும். ராணிப்பேட்டை நகராட்சி  தூய்மைப் பணியாளர்கள் சிறப்பான முறையில் தூய்மைப் பணி செய்து வருகின்றனர்.  உங்களின் பணி கடவுளுக்கு செய்யும் சேவைக்கு நிகரான தூய்மைப் பணியை செய்யும் உங்களை நாங்களெல்லாம் கையடுத்து கும்பிட வேண்டும். நமது தலைவர் கருணாநிதிக்கு நூற்றாண்டு விழா கொண்டாடும் வேளையில் உங்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியை சொல்கிறேன்.

ராணிப்பேட்டை நகராட்சி தூய்மைப் பணியாளர் தாங்களின் பிள்ளைகளுக்கு கல்விக் கட்டணம் செலுத்த முடியாமல் உள்ளவர்களின் பிள்ளைகளுக்கு நான் உயிருடன் இருக்கும் வரை கல்வி கட்டணம் செலுத்துகிறேன். இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த திமுக சுற்றுச்சூழல் அணிக்கு பாராட்டு தெரிவிக்கொள்கிறேன். எனெனில் உண்மையிலேயே யாருக்கெல்லாம் உதவி தேவை இருக்கிறதோ அவர்களுக்கு தேடிச் சென்று உதவிகள் செய்ய வேண்டும் என்றார்.

இதில், நகர திமுக நிர்வாகிகள் மற்றும் நகராட்சி அலுவலர்கள், தூய்மைப் பணியிளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மழைக்கு இன்று இடைவேளை! நாளை மீண்டும் தொடங்கும்!

சவரனுக்கு ரூ.800 உயர்ந்த தங்கம் விலை!

வங்கிக் கணக்கு தொடங்கினால் பணம் கிடைக்குமா? கல்லூரி மாணவர்கள் கவனத்துக்கு!

டைடல் பார்க்கில் டெக்னிக்கல் அசிஸ்டென்ட் பணி: விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!

கால்பந்து வரலாற்றில் முதல்முறை... குராசோ தீவு உலக சாதனை!

SCROLL FOR NEXT