தமிழ்நாடு

சேலத்தில் ஈரடுக்கு பேருந்து நிலையம்: முதல்வர் திறந்து வைத்தார்

மத்திய அரசின் சீர்மிகு நகரம் திட்டத்தின் கீழ் சேலத்தில் ஈரடுக்கு பேருந்து நிலையத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.

DIN

மத்திய அரசின் சீர்மிகு நகரம் திட்டத்தின் கீழ் சேலத்தில் ஈரடுக்கு பேருந்து நிலையத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.

மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி எனப்படும் சீர்மிகு நகரம் திட்டத்தின் கீழ் சேலம் மாநகராட்சியில் அமைக்கப்பட்டுள்ள ஈரடுக்கு பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு திட்ட பணிகளை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

மத்திய அரசின் சீர்மிகு நகரம் திட்டத்தின் கீழ் சேலம் மாநகராட்சியில் பல்வேறு திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சேலம் மாநகராட்சியில் சீர்மிகு நகரத்திட்டத்தின் கீழ் ரூ.96.53 கோடி மதிப்பில் ஈரடுக்கு பேருந்து நிலையம், ரூ.19.71 கோடி மதிப்பில் பெரியார் பேரங்காடி, ரூ.10.58 கோடி மதிப்பில் போஸ் மைதானம்,  ரூ.14.97 கோடி மதிப்பில் வ.உ.சி மார்க்கெட், ரூ.33.60 கோடி மதிப்பில் நேரு கலையரங்கம், ரூ.28.59 கோடி மதிப்பில் பள்ளப்பட்டி ஏரி புனரமைப்பு பணி ஆகவே மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

மத்திய அரசின் சீர்மிகு நகரம் திட்டத்தின் கீழ் சேலம் மாநகராட்சியில் செய்யப்பட்டுள்ள திட்டப்பணிகளை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார். 

இந்நிகழ்ச்சியில்  அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, எம்ஆர்கே பன்னீர்செல்வம், ரகுபதி, மதிவேந்தன் மற்றும் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், எம்.பி எஸ்.ஆர்.பார்த்திபன், எம்.எல்.ஏ ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உத்தரகண்டில் தொடரும் கனமழை: நிலச்சரிவில் மாயமானவர்களை தேடும் ராணுவம்!

பேரிடர் அபாயங்களை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும்: சு.வெங்கடேசன் எம்.பி

சென்னை நட்சத்திர விடுதியில் தீ விபத்து: கிராண்ட் மாஸ்டா்ஸ் செஸ் ஒத்திவைப்பு!

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 9,500 கனஅடியாக அதிகரிப்பு

அதைப் பற்றி எதுவும் தெரியாது! இந்தியாவின் குற்றச்சாட்டுக்கு டிரம்ப் பதில்!

SCROLL FOR NEXT