தமிழ்நாடு

மேட்டூா் அணையிலிருந்து நாளை தண்ணீர் திறப்பு

DIN

நாளை காலை தமிழக முதல்வர் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீரை திறந்துவைக்கிறார்.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 333 நாட்களாக நூறு அடியாக நீடிக்கிறது. கடந்த ஆண்டு பெய்த மழையின் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 333 நாட்களாக 100 அடிக்கு குறையாமல் நீடித்து வருகிறது.

 மேட்டூர் அணையின் நீர் இருப்பு திருப்திகரமாக இருப்பதால் நாளை காலை 90-வது ஆண்டாக மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தண்ணீர் திறந்து வைக்கிறார்.

தமிழக அமைச்சர்கள், சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள், நீர்வளத் துறை மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள், விவசாயிகள் திரளாக பங்கேற்கின்றனர்.
  மேட்டூர் அணையின் 90 ஆண்டுகால வரலாற்றில் நாளை காலை 19 ஆவது ஆண்டாக குறித்த நாளான ஜூன் 12ல் தண்ணீர் திறக்கப்படுகிறது. 

அணையின் நீர் இருப்பு வரத்தும் திருப்திகரமாக இருந்ததால் 11 ஆண்டுகள் விவசாயிகளின் வேண்டுகோளை ஏற்று முன்கூட்டியே டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

அணையில் உள்ள நீர்மின் நிலையம், சுரங்க மின் நிலையம் மற்றும் ஏழு கதவனைகளில் பராமரிப்பு பணிகள் நிறைவடைந்து மின் உற்பத்திக்கு தயார் நிலையில் உள்ளன. காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டதும் நீர் மின் நிலையங்களில் மின் உற்பத்தி தொடங்கப்படும்.

குறித்த நாளில் குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவதால் காவிரி டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரலாறு காணாத உச்சம்.. மகிழ்ச்சியில் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள்!

பெண்களுக்கு சமஅதிகாரமளிக்கும் இந்தியாவை உருவாக்குவோம் - சோனியா

மாட்டிறைச்சி தயார் செய்து வையுங்கள்: அண்ணாமலைக்கு ஈவிகேஎஸ் இளங்கோவன் பதில்!

திரைப்படமாகும் கருப்பின நாயகனின் வாழ்க்கை!

எப்படி இருந்திருக்க வேண்டியவர்... பிரபல நடிகருக்கு என்ன ஆனது?

SCROLL FOR NEXT