காளிதாசன் 
தமிழ்நாடு

செங்கல்பட்டில் வன்னியர் சங்கத் தலைவர் கொலை: காவல் துறை விசாரணை!

செங்கல்பட்டில் வன்னியர் சங்கத் தலைவர் கொலை சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

DIN

செங்கல்பட்டில் வன்னியர் சங்கத் தலைவர் கொலை சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகர் பேருந்து நிலையத்தில் திங்கள்கிழமை பட்டப்பகலில் வன்னியர் சங்கத் தலைவரை 3 பேர் அரிவாளால் வெட்டிக் கொலை செய்து விட்டு தலைமறைவாகி விட்ட சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மறைமலை நகர் அருகே நின்னகாட்டூர் பகுதியை சேர்ந்தவர் காளிதாசன்(36). இவர் பாமக நிர்வாகியாகவும் இருந்து வருகிறார். இவர் மறைமலைநகர் பேருந்து நிலையம் அருகே தேநீர்க் கடை ஒன்றில் தேநீர் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது திடீரென அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் அரிவாளால் காளிதாசனை வெட்டி விட்டு தலைமறைவாகி விட்டனர்.

அருகிலிருந்தவர்கள் உடனடியாக அவரை பொத்தேரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு போய் சேர்த்தனர். அங்கிருந்த மருத்துவர்கள் காளிதாசன் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

பட்டப்பகலில் நடந்த இக்கொலைச் சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவ இடத்தில் காவல் துறையினர் விசாரணை நடத்தி தலைமறைவான குற்றவாளிகளை தேடி வருகின்றனர். தடயவியல் நிபுணர்களும் சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தூய்மைப் பணியின்போது மயங்கி சாக்கடைக்குள் விழுந்த இளைஞா் உயிரிழப்பு: மூன்று போ் கவலைக்கிடம்

நிா்வாகத் திறனால் சிறந்த உலகத் தலைவராக உருவெடுத்தவா் மோடி: புதின் புகழாரம்

ஸ்பீடு ஸ்கேட்டிங்: இந்தியாவுக்கு 2 தங்கம்

இது சீற்றமல்ல, எச்சரிக்கை!

திருக்கோஷ்டியூரில் அஹோபில மடம் ஜீயா் சுவாமி தரிசனம்

SCROLL FOR NEXT