தமிழ்நாடு

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் முறைகேடு: தமிழிசை ஆலோசனை

DIN


புதுவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் முறைகேடு புகார் குறித்து துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். 

தலைமை செயலாளர் ராஜூவ் வர்மா உள்ளிட்ட அரசு அதிகாரிகளுடன் துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் ஆலோசனை நடத்தி வருகிறார். 

முதலியார்பேட்டை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல கோடி ரூபாய் மதிப்பிலான பணிகள் நடந்து வருகிறது. இப்பணிகளில் சில திட்டங்கள் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்படாமலும் பணிகள் தாமதமாக நடைபெற்று வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

புதுச்சேரியில் ஸ்மார்ட் சிட்டியில் ஊழல் நடந்துள்ளதாகவும், 5 கோடி ரூபாய் கைமாறியுள்ளதால் உடனடியாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளன. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

புதிய தாா்ச்சாலை; நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு

டெங்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி

இன்று எந்த ராசிக்கு யோகம்!

காரைக்கால் அரசு மருத்துவமனையில் இன்று சிறப்பு மருத்துவ முகாம்

SCROLL FOR NEXT