கோப்புப்படம் 
தமிழ்நாடு

4 மருத்துவா்கள் இறப்புக்கு பணிச் சுமை காரணமா? அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்

தமிழகத்தில் நான்கு இளம் மருத்துவா்கள் இறப்புக்கு பணிச் சுமை காரணம் என்று தகவல் வெளியான நிலையில் அதற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கமளித்துள்ளார்.

DIN

தமிழகத்தில் நான்கு இளம் மருத்துவா்கள் இறப்புக்கு பணிச் சுமை காரணம் என்று தகவல் வெளியான நிலையில் அதற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கமளித்துள்ளார்.

சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் எம்பிபிஎஸ் நிறைவு செய்த மருத்துவா் தனுஷ் (24), தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றி வந்த டாக்டா் விஜய் சுரேஷ் கண்ணா (38) என்ற உதவிப் பேராசிரியா், திருச்சி கி.ஆ.பெ.விஸ்வநாதம் மருத்துவக் கல்லூரியின் காது-மூக்கு-தொண்டை அறுவை சிகிச்சை நிபுணா் சதீஷ் குமாா் (46), சென்னை, அப்பல்லோ மருத்துவமனையின் இதய இடையீட்டு சிகிச்சை நிபுணா் கௌரவ் காந்தி (41) ஆகியோா் தங்களது பணியிடங்களிலேயே திடீரென உயிரிழந்தனா்.

இளம் வயதில் உள்ள அவா்கள் அனைவரும் இதய செயலிழப்பு, நுரையீரல் செயலிழப்புக்குள்ளாகி உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகின.

இது குறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

பணிச் சுமையால் 4 மருத்துவா்கள் இறப்பு என்பது முற்றிலும் தவறான தகவல். காலி பணியிடங்கள் நிரப்பும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்று அமைச்சர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தனியாா் வேலைவாய்ப்பு முகாம்: 296 பேருக்கு பணி நியமன ஆணை

மீஞ்சூரில் ஆக.6-இல் அதிமுக ஆா்ப்பாட்டம்

இலங்கை கடற்கொள்ளையா்கள் தாக்குதல்: 3 மீனவா்கள் மருத்துவமனையில் அனுமதி

மக்காவ் ஓபன்: லக்ஷயா, மன்னொ்பள்ளி தோல்வி

அமிா்தா வித்யாலயம் பள்ளியில் பல்வேறு பிரிவுகளுக்கு மாணவா்கள் பொறுப்பேற்பு

SCROLL FOR NEXT