முகப்பு
தமிழ்நாடு

தலைமைச் செயலகத்தில் செந்தில் பாலாஜி அறையில் சோதனை!

சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை  துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் அறையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 7:07 PM
பகிர்:

சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை  துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் அறையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்ததாக எழுந்த புகாரையடுத்து அவரது வழக்கை உச்ச நீதிமன்றம் மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டது.

இதையடுத்து கடந்த மே மாதம் 26-ம் தேதி முதல் ஜூன் 2-ம் தேதி வரை வருமான வரித்துறை அதிகாரிகள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் மற்றும் அவரது ஆதரவாளர் வீடுகளில் சோதனை மேற்கொண்டனர்.

இந்நிலையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் உறவினர்கள் வீட்டில் சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள செந்தில் பாலாஜியின் அறைக்கு பலத்த பாதுகாப்புடன் வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் இருவர் மற்றும் வங்கி அதிகாரிகள் 3 பேர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், சென்னையில் உள்ள அமைச்சரின் வீட்டின் முன்பு அதிவிரைவுப் படையை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட வீரர்கள் குவிக்கப்பட்டதால் பதற்றம் நிலவுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →